Tuesday, September 6, 2016

அதிகாரம் வழங்கப்படுகின்றது என்றால் யாருக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது வை.எல்.எஸ். ஏறாவூரில் கேள்வி

Published by Madawala News on Tuesday, September 6, 2016  | 


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

வீடியோ எழுச்சி மாநாட்டில் வை.எல்.எஸ். இன் கருத்து:- 

www.youtube.com/watch?v=pCYyNvno1II

இந்த நாட்டிலே ஏற்படுதப்பட இருக்கின்ற அதிகார பகிர்வில் பிழைகள் இடம் பெறுமாயின் அதனை திருத்தி மைப்பதற்கு நூறு ஆண்டுகள் எடுக்கலாம் அல்லது அதற்கு மேலும் செல்லாம். 

அவ்வாறானதொரு ஆபத்தான விடயத்தில் இருக்கின்ற ஆழமான அதிகார பகிர்வுகளை புரிந்து கொள்ளாமலும் என்னவென்று தெரியாமலும் நமது சமூகம் எம்மை பிரதி நிதிதுவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளும் முகநூல்களிலும் இணைய தளங்களிலும் ஒவ்வொருவரும் மாறி மாறி புகழ் பாடிக்கொண்டிப்பது அல்லது சேறு பூசுவது போன்ற விடயங்களிலே காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றார்கள்.

மறு புறத்திலே நமது தலை விதியினை தீர்மானிக்கின்ற அதிகாரபகிர்வு தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டு கொண்டிருகின்றது. இந்த நாட்டிலே எந்த அளவிற்கென்றால் தமிழ் சமூகத்திற்கு அண்ணலவான எண்ணிக்கையில் முஸ்லிம் சமூகம் வாழவது அல்லாமல் யுத்தத்தினால் சகல விதத்திலும் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படிருக்கின்ற போதிலும் கூட ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பேன்கீ மூன் இந்த நாட்டிற்கு வருகின்ற பொழுது முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று நிகழ்ச்சி நிரலில் எந்த இடத்திலும் இருக்கவில்லை. ஆனால் சமூக ஆவலர்கள் ஊடகங்களில் அளவிற்கதிகமாக எழுதியதற்கு அப்பால் கண் துடைப்பிற்காக முஸ்லிம் தலைமகளையும் அழைத்து முஸ்லிம் சமூகத்தினையும் சந்தித்தோம் என்று காட்டுகின்ற நிலையில்தான் எமது முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பதாக கடந்த கிழமை ஏறாவூர் கடற்கரை மைதானத்தில் இடம் பெற்ற சுதந்திர கிழக்கிற்காக கண் திறபோம் எமது மண் காப்போம் எனும் தலைப்பில் இடம்பெற்ற விழிப்பூட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மெற் கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து எறாவூர் விழிப்பூட்டும் மாநாட்டிலே உரையாற்றிய வை.எல்.எஸ்.ஹமீட்.... 

இந்த பின்னணியிலே ஏற்படுத்தப்பட இருக்கின்ற அதிகார பகிர்வு சம்பந்தமாக நாங்கள் ஏறாவூரில் எங்களது அரம்ப கூடத்தினை ஏற்பாடு செய்தமைக்கு முக்கிய காரணம் மட்டக்களப்பு மாவட்த்திலே படித்த அசமூகம் அதிகம் வாழ்வது ஏறாவூர் பிரதேசத்திலாகும். ஏறாவூர் பிரதேசம் படித்த சமூகத்தினை கொண்ட பிரதேசம் என பெரும் தலைவர் அஸ்ரஃப் கூறியதை கூட நான் கேட்டிருக்கின்றேன். இந்த அதிகரா பகிர்வு சம்பந்தமாக ஆழாமாக சிந்தித்து சமூகத்திற்காக நாம் குரல் கொடுத்து எடுக்க வேண்டிய இம் முடிவினை பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுகின்ற இந்த கூட்டமானது இப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படதை இட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைக்கின்றேன்.
இந்த அதிகார பகிர்வு சமபந்தமாக ஆழமாக நான் உரையாற்ற விட்டாலும் சற்று அழமாக கூறலாம் என நினைக்கின்றேன். 

அதிகாரபரவலாக்கம் என்ற வட்டத்திற்குள்தான் வடகிழக்கு இணைப்பு என்பது வருகின்றது. ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டு செல்லாக்காசாக இருக்கின்ற  மத்திய அரசாங்கத்திடம் இருக்கின்ற அதிகாரமானது பகிர்ந்தளிகப்படுவதே நாம் அதிகார பரவலாக்கம் என்கின்றோம். ஆனால் இம்முறை பகிர்ந்தளிக்கப்பட இருக்கின்ற மத்திய அரசாங்கத்தினுடைய அதிகாரமானது ஆழமானதாகவும் அதிகாரமிக்கதாகவும் இருக்கின்றது என்பது உண்மையான விடயமாகும். குறிப்பாக சொல்லப்போனால் மாகாணகளுக்கு தற்பொழுது இருக்கின்ற அதிகாரத்தினை விடவும் பல மடங்கு அதிகாரம் வழங்கப்பட இருக்கின்றது.

அதிகாரம் வழங்கப்படுகின்றது என்றால் யாருக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. தனிப்பட்ட நபர்களுக்கா? தனிப்பட்ட சமூகங்களுக்கா? அதிகாரபரவலாக்கம் என்பது அதிகாரம் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகும்.. அப்படி என்றால் மாகாணத்தில் யாருக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட இருக்கின்றது? மாகானத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு சமூகத்தினை மையப்படுத்தியே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும். இலங்கையில் சிங்கள மக்கள் பெரும் பான்மையாக வாழுகின்றார்கள் அவர்கள்தான் இந்த நாட்டினை ஆழுகின்ற சமூகமாக இருக்கின்றார்கள். மாகாணங்களில் எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்க போகின்றதோ அந்த சமூகம்தான் அதிகாரத்தினை செயற்படுத்த போகின்றது. ஆகவே வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் 17வீதமாக குறைகப்படுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு போதும் அதிகாரம் கிடைக்க போவதில்லை என்பது இங்கு முக்கியவிடயாமாக நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

இலங்கையில் எந்தவொரு மாகாணத்திலாவது முஸ்லிம்கள் நிலப்பிராந்திய சமூகமாக இருக்கின்றார்களா? கிழக்கு மாகாணத்திலே மட்டும் அதாவது அம்பாறை மாவட்டத்தில் மட்டுமே முஸ்லிம்கள் நிலப்பிராந்திய சமூகமாக இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தினை தவிர்ந்து ஏனைய எட்டு மாகாணங்களிலும் முஸ்லிம் சிறுபான்மை சமூகமாகவே வாழுகின்றார்கள். ஆகவே இன்று ஒரு மத்திய அரசாங்கத்தினால் ஆழப்பட்டு கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இன்னும் எட்டு அல்லது ஒன்பது அரசாங்கங்களால் ஆழப்பட இருக்கின்றது என்பதுதான் உண்மை நிலை என்றால் அதிகார பரவலாக்கம் முஸ்லிம்களுக்கு உகந்ததா? என்பதைதான் நாம் அறிவு ரீதியாக ஒருமித்து சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம்.

இன்று முஸ்லிம் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற கட்சி தலைவர்கள் பலர் முஸ்லிம்களுக்கு அதிகார பகிர்வு வேண்டும் என்றும்இ அதிகமான அதிகாரம் வேண்டும் என பேசுகின்ற பொழுது அதிகாரப்பகிர்வு எதன் அடிப்படையில் இடம் பெறப்போகின்றது என்பது சம்பந்தமாக எந்த அறிவும் இல்லாமால் பேசுகின்றார்கள். முஸ்லிம்கள் நிலப்பிராந்திய சமூகமாக இந்த நாட்டிலே எந்தவொரு மாகாணத்திலும் இடம் பெறாத நிலையில் முஸ்லிம்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படாது அங்கு இருக்கின்ற பெரும்பான்மை சமூகத்திற்கு அந்த அதிகார கொடுக்கப்படுகின்ற பொழுது இந்த நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசாங்கங்களினால் முஸ்லிம்கள் ஆழப்பட இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும். குறிப்பாக கிழக்கிற்கு வெளியில் குறித்த நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட போவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

மேலும் அதிகாரபரவலாக்கம் சம்ப்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வைல்.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்த விரிவான கருத்துகளின் காணொளி இங்கே எமது இணைய நாளிதல் வாசகற்களுக்காக பதிவெற்றம் செய்யப்பட்டுள்ளது.
 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top