Free Space

அனைவருக்கு அழகிய முன்மாதியாக திகழும் மைத்ரி விக்ரமசிங்க...


ஜனாதிபதி பிரதமர் என நாட்டு தலைவர்கள் பொது போக்குவருத்து சேவைகளில் பயணம் செய்வது ஐரோப்பிய நாடுகளின் சாதாரண விடயம் என்றாலும் இலங்கை போன்ற நாடுகளில் நாட்டு தலைவர்கள் அவரது குடும்பத்தினர் ராஜ மரியாதைகளுடன் பவணி வருவதே வழக்கம்.அப்படி பழகிப்போன எம்போன்ற நாடுகளின் எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பாரியார்கள் மிக எளிமையாக நடந்துகொண்டு அனைவருக்கும் முன்மாதியாக திகழ்கின்றார்கள்.

இதனை ஒப்புவிக்கும் வகையில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று கொழும்பில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் புத்தக வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.

அரசியல் பிரபலங்கள் , பேராசியர்கள் புத்திஜீவிகள் என பலர் கலந்துகொண்டுள்ள இந்த நிகழ்வின் இடைநடுவே தேநீர் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அதன்போது அங்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களின் பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க இருந்ததை கண்டு சில முக்கியஸ்தர்கள் அவர் அருகில் சென்று " மெடம் நீங்கள் இப்போதா வந்தீர்கள் உங்களை காணக்கிடைக்கவில்லையே ?  என விசாரித்துள்ளனர்.

அவர்களின் பதில் அளித்த பேராசிரியர் மைத்ரி " நான் வருவதற்கு சிறிது தாமதமாகிவிட்டது கீழே இடம் காலியாக இல்லாததால் பெல்கணியில் அமர்ந்து இருந்தேன் எனது பழைய சினேகிதி ஒருவரும் அங்கிருந்தார் அவருடன் அமர்ந்துகொண்டேன்  என குறிப்பிட்டுள்ளார்.

இதை கேட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.அமைச்சர்கள் வீட்டு நாய்களின் அலப்பரையே தாங்கிக்கொள்ள முடியாத இந்த காலத்தில் இப்படியும் ஒரு பிரதாமரின் மனைவியா என பலர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

களனி பல்கலைகழத்தில் பேராசிரியராக கடமையாற்றும் மைத்ரி விக்ரமசிங்க பிரதமரை விட அதிக மாதசம்பளம் பெறுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.



அனைவருக்கு அழகிய முன்மாதியாக திகழும் மைத்ரி விக்ரமசிங்க... அனைவருக்கு அழகிய முன்மாதியாக திகழும் மைத்ரி விக்ரமசிங்க... Reviewed by Madawala News on 9/14/2016 02:51:00 PM Rating: 5