Accaddemy

கண்டி, தொடங்கொல்லை மகாவலி ஆற்றில் கைக்குண்டு .



-ஜே.எம்.ஹபீஸ் -

கண்டி, தொடங்கொல்லை ப் பிரதேசத்தில் வைத்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றில் இருந்து தொடங்கொல்ல என்ற இடத்தில் ஆற்றுமணல் எடுக்கப்படுகின்றது. அவ்விடத்திலேயே மேற்படி கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டதாகப் பொலீசார் தெரிவித்தனர். மேற்படி இடத்தில் ஐவர் மணல் அள்ளிக் கொண்டிருந்த சமயமே அதனைக் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக மணல் எடுப்பதற்கு பொறுப்பாக உள்ளவரிடம் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்தே பொலீஸ் அவசர தொலைபேசிச் சேவை மூலம் பொலீஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கண்டிப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கண்டி, தொடங்கொல்லை மகாவலி ஆற்றில் கைக்குண்டு . கண்டி, தொடங்கொல்லை மகாவலி ஆற்றில் கைக்குண்டு . Reviewed by Madawala News on 9/11/2016 02:36:00 PM Rating: 5