Ad Space avaiable

சுதந்திர கட்சி குருநாகல் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ...


குருணாகலையில் நேற்று நடைபெற்றது ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு.  இதற்கு ரணில் விக்கிரமசிங்கவை பிரதான விருந்தினராக அழைத்திருந்தால் இன்னும் நல்லதாக இருந்திருக்கும் என தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் நேற்றைய மாநாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாட்டுக்கு வருகை தந்திருந்தவர்களின் தொப்பி நீல நிறமாக இருந்தாலும், தலை பச்சை நிறமாக காணப்பட்டது. அணிந்திருந்த சேர்ட் நீல நிறமாக காணப்பட்டாலும், உள்ளம் பச்சை நிறமாகவே காணப்பட்டது. எனவே, இது ஐ.தே.க.யின் மாநாடு.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை, நகர சபை,  மாகாண சபை என்பவற்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கே அதிக வாக்குப் பலம் காணப்பட்டது. இருப்பினும், அவ்வாறான அமைப்பாளர்களை அக்கட்சி நீக்கியுள்ளது. எந்தவித வாக்குப் பலமும் இல்லாத, தோல்வியடைந்தவர்களை அமைப்பாளர்களாக நியமித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர கட்சி குருநாகல் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ... சுதந்திர கட்சி குருநாகல் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ... Reviewed by Madawala News on 9/05/2016 10:36:00 PM Rating: 5