தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.



ஒருநாள் கிரிக் கெட் தர­வ­ரி­சையில் பாகிஸ்தான் இது­வரை இல்­லாத அளவில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது.

இதனால் பாகிஸ்தான் தன்­னிச்­சை­யாக 2019 உலகக் கிண்­ணத்­திற்கு தகுதி பெறு­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது.

இங்­கி­லாந்து– - பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்­கெட்­தொடர் முடி­வுக்கு வந்­தது.

தொடர்ந்து 4 போட்­டி­களை வென்று 4–-0 என இங்­கி­லாந்து முன்­னி­லையில் இருந்­தது. கடைசிப் போட்­டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வைட்
வொஷ்ஷை தவிர்த்­தது.

இந்த தொடர் தொடங்­கு­வ­தற்கு முன்பு பாகிஸ்தான் 87 புள்­ளிகள் பெற்­றி­ருந்­தது.

இந்த தொடரை 1-–4 என இழந்­ததால் ஒரு புள்ளி சரிந்து 86 புள்­ளி­களை பெற்­றுள்­ளது.

ஐ.சி.சி. கிரிக்கெட் தர­வ­ரிசை முறையை 2001ஆ-ம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதில் இருந்து பாகிஸ்தான் தர­வ­ரி­சையில் இவ்­வ­ளவு மோச­மான அடி­பா­தா­ளத்­திற்குச் சென்­றது கிடை­யாது. முதன்­மு­றை­யாக 86 புள்­ளி­களை பெற்று 9-ஆவது இடத்தில் உள்­ளது.

2019ஆ-ம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெற இருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணத் தொட­ருக்கு ஒரு குறிப்­பிட்ட கால இடை­வெ­ளிக்குள் முதல் 8 இடங்­களை பிடிக்கும் அணிகள் தன்­னிச்­சை­யாக உல
கக் கிண்­ணத்­திற்கு தகுதி பெறும்.

மற்ற அணிகள் தகுதிச்சுற் றில் விளையாடிய பின்னரே முதன்மை சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல். தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல். Reviewed by Madawala News on 9/06/2016 12:02:00 PM Rating: 5