யாத்திரைக்காக காத்திருந்தோரின் கதை ...

ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­டோ­ருக்கு இவ்­வ­ருடம் ஹஜ் கைந­ழுவிப் போய்­விட்­டது. அவர்கள் புனித கட­மைக்­காக ஆயத்­தங்­க­ளுடன் காத்­தி­ருந்­த­வர்கள். எப்­போ­து­மில்­லா­த­வாறு இவ்­வ­ருடம் மேல­திகக் கோட்டா கிடைக்­கப்­போ­கி­றது என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு ஊட்­டப்­பட்­டது. 

ஹஜ் முக­வர்­களும் தமது நலன்­க­ருதி மக்­களின் கட­வுச்­சீட்­டு­களை சேக­ரித்துக் கொண்­டார்கள். சில முக­வர்கள் முற்­ப­ணமும் பெற்றுக் கொண்­டார்கள். 

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு இறு­தி­நாளில் அதி­ரடி செய்­தி­யொன்றை வெளி­யிட்­டது ‘மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­காது’ என்­பதே அந்தச் செய்தி. ஹஜ் கனவில், ஆன்­மீக சிந்­த­னையில் மூழ்­கி­யி­ருந்­த­வர்கள் ஆடிப்­போய்­விட்­டார்கள். அவர்­களால் கண்­க­லங்­கத்தான் முடிந்­தது. ஹஜ் முகவர்கள் அல்லாஹ் அளந்­தது தான் எமக்குக் கிடைக்கும்.

என்ன செய்ய முடியும். எல்லாம் அல்­லாஹ்வின் நாட்டம் என்று ஆறுதல் அடைந்தார்கள். ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ஹஜ் கடமையை தவ­றவிட்ட மக்­களின் வேத­னை­க­ளையும், அவர்கள் சிந்­திய கண்­ணீ­ரையும் மறந்­து­விட்டு இறுதி ஹஜ் குழு கடந்த 5 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நண்­பகல் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்­தி­லி­ருந்து ஜித்தா நோக்கி புறப்­பட்டுச் சென்­றது. 

இக்­கு­ழுவில் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம், தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, திரு­கோ­ண­மலை மாவட்ட ஐ.தே.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் அடங்­கி­யி­ருந்­தனர். 

மேலும், அரச ஹஜ் குழுவின் தலைவர் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள், முஸ்லிம் கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்பாளர் உட்பட அதி­கா­ரி­களும் ஹஜ் கட­மைக்­காக வானில் பறந்தார்கள். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இந்நிலையில் ஹஜ் கடமை தவறிப்போன மக்களில் சிலரை தொடர்புகொண்டது. 

அவர்கள் உங்களுடன் பேசுகிறார்கள்.

நம்பியிருந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்தது
பி.எம்.எம்.மன்சூர் – உடத்தலவின்னை

இலங்­கைக்கு கடைசி நேரத்தில் மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்கும் எனக்கும் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்றிக் கொள்­ளலாம் என்ற நம்­பிக்­கையில் இருந்த எனக்கு ஏமாற்­றமே கிடைத்­தது. புனித கஃபாவின் காட்­சி­களே எனது மனக்கண் முன் நிழ­லா­டுகி­றது’ என்­கிறார் பி.எம்.எம்.மன்சூர். 

மன்சூர் உடத்­த­ல­வின்னை மடி­கேயைச் சேர்ந்­தவர். அவ­ரது வயது 67. மன்சூர் ஹஜ் பயணம் தவ­றி­விட்­டதை எம்­முடன் இவ்­வாறு பகிர்ந்து கொண்டார். நான் திணைக்­க­ளத்தில் ஹஜ் பய­ணத்­துக்­காக பதிவு செய்து கொண்­டி­ருக்­கிறேன். கொழும்­பி­லுள்ள ஹஜ் முகவர் நிலை­ய­மொன்­றினைத் தொடர்பு கொண்டேன். இம்­முறை இது­வரை 2240 கோட்­டாவே கிடைத்­துள்­ள­தா­கவும் அந்தக் கோட்டா பூர்த்­தி­யா­கி­விட்­ட­தா­கவும் முகவர் நிலைய உரி­மை­யாளர் கூறினார். 

எப்­ப­டி­யா­வது இந்த வருட ஹஜ் கடமை நிறை­வேற்­றி­யாக வேண்டும். அடுத்த வருடம் வரை காத்­தி­ருக்க முடி­யாது. அடுத்த வருடம் நான் இருப்­பேனோ இல்­லையோ எல்­லாம்­வல்ல அல்­லாஹ்வின் நாட்டம் என்றேன். முகவர் நிலைய உரி­மை­யாளர் எனக்கு ஆறுதல் வழங்­கினார்.

கடைசி நேரத்தில் மேல­திக ஹஜ் கோட்டா பெற்றுக்கொள்ள அமைச்சர் ஹலீமும் முயற்சி செய்­கிறார். உங்­க­ளுக்கு ஹஜ்­ஜுக்கு போகலாம் என்று அவர் எனது பாஸ்­போர்ட்டை பெற்றுக் கொண்டார்.

ஆனால் என்­னி­ட­மி­ருந்து முற்­பணம் எதுவும் பெற்றுக் கொள்­ள­வில்லை. 

பாஸ்­போர்ட்டைக் கொடுத்­து­விட்டு எதிர்­பார்த்­தி­ருந்தேன். உற­வி­னர்கள் எல்­லோ­ரி­டமும் பய­ணமும் சொல்­லி­விட்டேன். எல்லா ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்தேன்.

ஆனால் இலங்­கைக்கு மேல­திக கோட்டா கிடைக்­காது என்ற அமைச்சர் ஹலீமின் அதி­ரடி தக­வலை பத்­தி­ரி­கையில் படித்­த­போது என்னால் தாங்கிக் கொள்­ளவே முடி­யா­மற்­போ­னது.

ஒவ்­வொரு நாளும் கனவில் கஃபாவைக் கண்டு கொண்­டி­ருந்த எனக்கு இது பேரி­டி­யாக இருந்­தது. வியர்த்துக் கொட்­டி­யது. 

ஊரில் எல்­லோரும் என்­னிடம் ஏன் ஹஜ்­ஜுக்குப் போக­வில்லை என்று கேட்டு என்னை வதைக்­கி­றார்கள். சம்­ப­வத்தை மறக்க முயன்­றாலும் அவர்­களின் கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளிப்­பதால் மறக்க முடி­யா­ம­லி­ருக்­கி­றது.

இவ்­வ­ருடம் ஹஜ் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்தும் பயணிக்க முடி­யாமற் போன­வர்­க­ளுக்கு அடுத்த வருடம் முதலிடம் வழங்குவதாக அமைச்சர் ஹலீம் உறுதியளித்திருக்கிறார்.

அந்த எதிர்பார்ப்பில் இருக்கிறேன். அல்லாஹ் எனக்கு ஹஜ் பாக்கியத்தைத் தரவேண்டும் என்றார்.  

அமைச்சு அதிகாரிகளின் அசிரத்தையே காரணம்
எம். ஆர். எம். நிஸ்தார் – உலப்பனை

மேற்­பட்­ட­வர்­களின் ஹஜ் கடமை ஈடே­ற­வில்லை. இதனை  முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு அதி­கா­ரி­களின் தவறு என்றே நான் நினைக்­கிறேன். நான் சவூ­தியில் வேலை செய்த காலத்தில் ஹஜ் செய்­தி­ருக்­கிறேன்.

இம்­முறை எனது மனை­வியை ஹஜ்­ஜுக்கு அழைத்துச் செல்­லவே ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருந்தேன். ஆனால் எனது ஆசை ஈடே­ற­வில்லை என்­கிறார் உலப்­ப­னையைச் சேர்ந்த 45 வய­தான எம். ஆர். எம். நிஸ்தார்.

நிஸ்தார் வாக­னங்கள் வாங்கி விற்­பனை செய்யும் தொழிலில் ஈடு­பட்­டுள்ளார். ஹஜ் முக­வர்­களை குறை கூறு­வதில் பய­னில்லை. மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்கும் எனக் கூறி­ய­வர்கள் கோட்­டாவை சவூதி அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள இரவு பக­லாக முயற்­சித்­தி­ருக்க வேண்டும். இறுதி நேரத்தில் முண்­டி­ய­டிப்­பதால் பய­னில்லை.

4 1/2 இலட்சம் ரூபா கட்­ட­ணத்தில் ஹஜ்­ஜுக்கு அழைத்துச் செல்­வ­தாக முகவர் கூறு­யி­ருந்தார். மேல­திக கோட்டா கிடைத்தால் அனுப்பி வைக்க முடியும் என்றும் ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளும் படியும் கூறினார். ஆனால் மேல­திக கோட்டா கிடைக்­கா­த­தினால் எனதும் மனை­வி­யி­னதும் ஹஜ் தவ­றி­விட்­டது. இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மனை­வியை ஹஜ் கட­மைக்­காக அடுத்த வருடம் அழைத்துச் செல்வேன்.

நான் சவூதி அரே­பி­யாவில் ஜித்­தா­விலும் தம்­மா­மிலும் தொழில் செய்­தி­ருக்­கிறேன்.

அங்­கி­ருந்து 1997 ஆம் ஆண்டு ஹஜ் கட­மையை நிறை­வேற்­றி­யி­ருக்­கிறேன். மனைவி ஹஜ் செய்ய ஆவ­லாக இருந்தார். அவரை அழைத்துச் செல்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அனைத்­தையும் மேற்­கொண்­டி­ருந்தேன்.

ஹஜ் முக­வர்கள் கடைசி நேரத்தில் கட்­ட­ணத்தை உயர்த்­தி­வி­டு­கி­றார்கள்.

பத்திரிகைகளில் குறைவான கட்டணத்தை விளம்பரப்படுத்திவிட்டு கூடுதல் கட்டணம் அறவிடுகிறார்கள் இதனை அனுமதிக்க முடியாது. திணைக்களம் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நம்பி ஏமாந்து போய்விட்டோம்! 
எச்.எம்.ஹில்மி – மடவளை பஸார்
‘ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்­களின் ஹஜ்­க­னவு இவ்­வ­ருடம் கானல் நீரா­கி­விட்­டது. ஹஜ் குழு மேல­திக ஹஜ் கோட்­டா­வுக்­கான முயற்­சியை இறுதி நேரத்தில் முன்­னெ­டுத்­த­மையே மேல­திக கோட்டா கிடைக்­கா­மைக்கு காரணம். 

மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா கிடைக்­க­வுள்­ளது. இறுதி நேரத்தில் கிடைக்கும் என நம்­பிக்­கை­யூட்­டப்­பட்­டதால் நாங்கள் ஏமாந்து போய்­விட்டோம் என்­கிறார். கண்டி மாவட்டம் மட­வளை பஸாரைச் சேர்ந்த எச்.எம்.ஹில்மி (50 வயது)

ஹில்­மியைத் தொடர்பு கொண்டு அவ­ரது ஹஜ் பய­ணத்­துக்கு என்­ன­வா­யிற்று என்று வின­விய போது அவரால் உட­ன­டி­யாக பதி­ல­ளிக்க முடி­யா­மற்­போ­னது. அந்­த­ள­வுக்கு அவ­ருக்குள் துயரம் நிறைந்­தி­ருந்­தது. அவர் தனது ஆதங்­கத்தை இவ்­வாறு வெளி­யிட்டார். 

‘நானும் எனது மனை­வியும் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தோம். எனது மனைவி அர­சாங்க பாட­சா­லையின் ஆசி­ரியை ஹஜ் பய­ணத்­துக்­காக வேண்டி மனைவியின் விடு­மு­றைக்­கான அனு­ம­தியும் பெற்­றி­ருந்தார். 

முன்­னைய வரு­டங்­களை விட தற்­போது இலங்­கை­யி­லி­ருந்து அதி­க­மானோர் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற தயா­ரா­கி­றார்கள். ஹஜ் கோட்டா சவூ­தி­யினால் வரை­ய­றுக்­கப்­பட்டு வழங்­கப்­ப­டு­கி­றது என்­பது உண்மை. ஆனால் ஹஜ் ஏற்­பா­டு­களைக் கவ­னிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­படும் ஹஜ் குழு இலங்­கைக்கு அதி­க­மான கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். 

பொறுப்­பான அமைச்சர் சவூ­திக்கு பல விஜ­யங்­களை மேற்­கொண்டு அய­ராது பாடு­பட்­டி­ருக்க வேண்டும்.

வெறு­மனே ஹஜ் அமைச்­ச­ருக்கும் சவூதி மன்­ன­ருக்கும் கடிதம் எழுதி விட்டு எதிர்­பார்த்­தி­ருப்­பதால் எதுவும் ஈடே­றி­விடப் போவ­தில்லை. இதுதான் இந்த வருட ஹஜ்­ஜுக்கு நேர்ந்த அனர்த்தம் என்று கூட கூறலாம். 

ஹஜ் குழு ஹஜ் முக­வர்­களை நிய­மிப்­ப­திலும் கோட்­டாவைப் பகிர்­வ­திலும் நீதி­மன்றப் படி­களில் ஏறி இறங்­கி­ய­தி­லுமே காலத்தைக் கடத்­தி­யதை நாம் கண்டோம்.

கண்டி மாவட்­டத்தில் ஏரா­ள­மான ஆசி­ரிய ஆசி­ரி­யைகள் ஹஜ் எதிர்­பார்ப்­புடன் விடு­மு­றை­க­ளையும் பெற்­றுக்­கொண்டு காத்­தி­ருந்து ஏமாந்து போய் விட்­டார்கள். இனி வரும் காலங்­களில் இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கு ஹஜ்­குழு உறு­தி­ய­ளிக்க வேண்டும். 

சவூதி அர­சினால் வழங்­கப்­படும் பேஸா விசாக்கள் வச­தி­யற்­ற­வர்­க­ளுக்கே போய்ச் சேர வேண்டும். அவை அர­சி­யல்­வா­தி­க­ளுக்குப் பகிர்ந்தளிக்கப்படக் கூடாது. 

எனதும் மனைவியினதும் எம்மைப் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ஹஜ் கனவுகள் அடுத்த வருடம் நனவாகுமா? அரச ஹஜ் குழுவும் அமைச்சும் என்ன பதில் தரப்போகிறது பொறுத்திருக்கிறோம்.  

இறுதி நேரம் கை நழுவி விட்டது எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்
எம்.எஸ்.எம்.நஸார் – கம்­ப­ளை

நானும் மனை­வியும் எனது தாயாரும் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற எல்லா ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்தோம் என்­றாலும் கடைசி நேரத்தில் கைகூ­டாமற் போயி­விட்­டது.

எல்லாம் அல்­லாஹ்வின் நாட்டம். ஹயாத்­துடன் இருந்தால் அடுத்­த­வ­ருடம் எங்கள் நாட்டம் நிறை­வேறும் என்ற எதிர்­பார்ப்பில் மனதைத் தேற்றிக் கொண்டேன்’ என்­கிறார் கம்­ப­ளையைச் சேர்ந்த 50 வய­தான கடற்­படை கப்டன் எம்.எஸ்.எம்.நஸார். 

தனதும் மனை­வி­யி­னதும் தாயா­ரி­னதும் ஹஜ்­க­டமை தவ­றிப்­போ­னமை தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில் ‘எங்­க­ளது பாஸ்­போர்ட்­களை ஹஜ் முகவர் ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தோம்.

இவ்­வ­ருடம் மேல­திக கோட்­டா­கி­டைக்க விருப்­ப­தா­கவும் அந்தக் கோட்­டாவில் பயண ஏற்­பா­டு­களைச் செய்­வ­தா­கவும் முகவர் என்­னிடம் கூறினார். எங்­க­ளிடம் முற்­பணம் எதுவும் அவர் பெற்றுக் கொள்­ள­வில்லை. 

நாங்கள் ஹஜ்  கட­மையை நிறை­வேற்றச் செல்­வ­தற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்தோம். உற­வி­னர்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் கூறி­யி­ருந்தோம். ஆனால் இறு­தியில் ஏமாற்­றமே கிடைத்­தது. 

மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­க­வில்லை எனவும் அதனால் இவ்­வ­ருடம் ஹஜ்­ஜுக்கு அனுப்­ப­மு­டி­யா­தெ­னவும் ஏஜன்ட் கூறினார். அமைச்­சர்கள் ஹலீம், பௌஸி ஆகியோர் மேல­திக கோட்டா பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மூலம் சவூதி மன்­ன­ரி­டமும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

என்றாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தன எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்து விட்டது என்றார்.
(ARA Fareel - விடிவெள்ளி)
யாத்திரைக்காக காத்திருந்தோரின் கதை ... யாத்திரைக்காக காத்திருந்தோரின் கதை ... Reviewed by Madawala News on 9/12/2016 10:16:00 AM Rating: 5