Oceas

முன்னாள் இஸ்ரேலிய தலைவர் ஷிமோன் பெரெஸ் காலமானார் !


முன்னாள் இஸ்ரேலிய பிரதமரும் ஜனாதிபதியுமான ஷிமோன் பெரஸ் தனது 93 வது வயதில் இன்று காலமானார்.

இந்த செய்தியை இஸ்ரேலிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை அவர் கடந்த ஒரு வாரகாலமாக பக்கவாதம் ஏற்பட்டு கடும்  சுகயீனமுற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1994 ஆம் வருடம் பலஸ்தீன் முன்னாள் பிரதமர் யாசிர் அரபாத்துடன் ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு அங்கு ஏற்பட்டிருந்த யுத்த சூழலை அப்போது கட்டுபடுத்த பங்களிப்பு செய்திருந்த பெரஸ் சமாதானத்துக்கான நோபல் பரிசையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முன்னாள் இஸ்ரேலிய தலைவர் ஷிமோன் பெரெஸ் காலமானார் ! முன்னாள் இஸ்ரேலிய தலைவர் ஷிமோன் பெரெஸ் காலமானார் ! Reviewed by Madawala News on 9/28/2016 08:17:00 AM Rating: 5