Accaddemy

ஓய்வுபெற்ற முன்னாள் பாதுகாப்பு படை உயரதிகாரிகளை களமிறக்க மஹிந்த திட்டம் !!


கூட்டு எதிர்க் கட்­சியின் புதிய அர­சியல் கட்­சிக்­கான பணிகள் முழு­மை­ய­டைந்­துள்­ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை தலை­மைத்­து­வ­மாக கொண்ட புதிய கட்­சியில் உள்­ளு­ராட்சிமன்ற தேர்­தலை எதிர்கொள்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் ஏற்கனவே  எடுக்­கப்­பட்­டுள்­ளது.


கட்­சியின் நிறம் மற்றும் சின­னத்தின் இர­க­சிய தன்­மையை தொடர்ந்தும் பாது­காக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில்,பாது­காப்பு படை­களில் ஓய்­வுபெற்ற முக்­கிய அதி­கா­ரி­களை தேர்தல் நட­வ­டிக்­கை­களில் கள­மி­றக்­கு­வது குறித்து திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ தலை­மையில் கூட்டு எதிர்க் கட்­சியில் செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­களின் விசேட சந்­திப்பு நேற்று மாலை 6.30 மணிக்கு இடம்­பெற்­றது. 


இதன் போது பல முக்­கிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.


எதிர்­வரும் உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலை எவ்­வாறு ஆட்சி மாற்­றத்­திற்­கான ஆரம்­ப­மாக மாற்­று­வது? அர­சாங்­கத்­திற்கு நெருக்­க­டி­களை கொடுப்­பது தொடர்­பான விட­யங்கள் இதன் போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. 


குறிப்­பாக புதிய கட்­சியை மக்கள் மத்­தியில் பிர­பல்­யப்­ப­டுத்தல் மற்றும் அதனை பிர­தான கட்­சி­க­ளுக்கு சவால் விடும் வகையில் மாற்­றுதல் மற்றும் உள்­ளூராட்சி மன்ற தேர்­தலில் அனைத்து தொகு­தி­க­ளிலும் போட்­டி­யி­டுதல் போன்ற விட­யங்கள் தொடர்­பாக ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. 


இதே­வேளை ....

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளி கட்­சிகள் புதிய கட்சி ஒன்றை அமைத்து அதன் ஊடாக எதிர்வரும் தேர்­தல்­களில் போட்­டி­யி­டுவோம் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவிற்கு அறி­வித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும புதிய கட்சி குறித்து தெளி­வுப­டுத்­து­கையில் குறிப்­பிட்டார். 


கூட்டு எதிர்க்கட்­சியை அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்ய வேண்­டிய தேவை தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 


கட்சியின் சின்னம் மற்றும் நிறம் என்பவை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற முன்னாள் பாதுகாப்பு படை உயரதிகாரிகளை களமிறக்க மஹிந்த திட்டம் !! ஓய்வுபெற்ற முன்னாள் பாதுகாப்பு படை உயரதிகாரிகளை களமிறக்க மஹிந்த திட்டம் !! Reviewed by Madawala News on 9/20/2016 09:13:00 AM Rating: 5