Accaddemy

முஸ்லீம் உலமா கட்சி உள்ளிட்ட ஏழு கட்சிகள் மஹிந்தவுடன் கூட்டணி அமைக்கத் தயார் !

கூட்டு எதிர்க் கட்சியைப் பலப்படுத்துவதற்கு அரசாங்க எதிர்ப்பு கட்சிகள் பல ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள தேசிய நாழிதல் செய்தியை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 7 அரசியல் கட்சிகளுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத லிபரல் கட்சி, தோட்ட மக்கள் முன்னணி, ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சி, ஸ்ரீ லங்கா ஹரத கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை, முற்போக்கு முன்னணி மற்றும் முஸ்லிம் உலமா கட்சி என்பன கூட்டணி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை..

இக்கட்சிகள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்கு உடன்பட்டுள்ளதாகவும் சிவில் அமைப்புக்கள் பலவும் தற்பொழுது வரை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் உலமா கட்சி உள்ளிட்ட ஏழு கட்சிகள் மஹிந்தவுடன் கூட்டணி அமைக்கத் தயார் ! முஸ்லீம் உலமா கட்சி உள்ளிட்ட ஏழு கட்சிகள் மஹிந்தவுடன் கூட்டணி அமைக்கத் தயார் ! Reviewed by Madawala News on 9/13/2016 07:26:00 AM Rating: 5