மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரம் குறித்து பேசப்பட்ட விவகாரம் எமது அமைப்புக்கு கிடைத்த வெற்றி ...



ஜெனீவா நகரில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரம் குறித்து பேசப்பட்ட விவகாரம் தமது அமைப்புக்கு (JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL - JMCI) கிடைத்த வெற்றி  என அவ்வமைப்பின் பிரதான ஏற்பாட்டாளர் ஜவாமில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் வாழும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை உணர்வு ரீதியான ஒன்றுதிரட்டி நாங்கள் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பை நிறுவியுள்ளோம். இது யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்கருதி செயற்படும். எமது அமைப்பு ஜெனீவா சென்று அங்கு அமர்வொன்றையும் நடத்தியது. இதன்  சாதகங்ளை காலப்போக்கில் எமது சமூகம் அறிந்துகொள்ளும்.

எமது அமைப்பு இந்த அமர்வில் பங்குகொண்டதன் விளைவாக தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை தொடர்பான விவகார அலுவலகத்துடன் உத்தியோகபூர்வ தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் ஜெனீவாவில் எமது அமைப்பு மற்றுமொரு கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளது.

ஐ.நா. அதிகாரி ரீட்டா ஐசக்  சார்பில் இதுதொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸை தலைமையகமாக கொண்டு செயற்படும் சர்வதேச யாழ்ப்பாணம் முஸ்லிம் அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறோம்.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள்  பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் யாழ்பாண முஸ்லிம்களின் நலன்களையும் பேசு பொருளாக்க திட்டமிட்டுள்ளோம்.

அந்த அமர்விலே சர்வதேச யாழ் முஸ்லிம் அமைப்பின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் நிச்சயம் பங்கேற்பார்கள்.

அந்தவகையில் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினருக்கு ஒத்துழைப்பு நல்கும் சகல உள்ளங்களுக்கு நன்றிகள். எமது அமைப்பினரின் சுயநலமில்லாத சேவை தொடருமென உறுதியளிக்கிறோம்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரம் குறித்து பேசப்பட்ட விவகாரம் எமது அமைப்புக்கு கிடைத்த வெற்றி ... மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரம் குறித்து பேசப்பட்ட விவகாரம் எமது அமைப்புக்கு கிடைத்த வெற்றி ... Reviewed by Madawala News on 9/30/2016 07:23:00 PM Rating: 5