Free Space

இம்முறை ஹஜ் பெருநாள் குத்பாவில் இருந்து விலகிக்கொண்ட சவுதி தலைமை முப்தி ...


சவுதி அரேபியாவின் தலைமை  முப்தி என அறியப்படும் அஷெய்க் இப்னு அப்துல்லாஹ் கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த ஆண்டு பாரம்பரிய ஹஜ் போதனை வழங்கப் போவதில்லை என்று அந்த நாட்டு அறிக்கைகள் தெரிவிகின்றன.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை  முஸ்லிம்களின் உச்சகட்ட புனிதப் பயணத்தை அடையாளப்படுத்துகின்ற போதனையானது தலைமை முப்தீயான அப்துல் அசிஸ் அல் ஷேக்கால் வழங்கப்படவுள்ளது.

உடல்நல குறைபாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

'ஈரானியர்கள் முஸ்லிம்கள் அல்ல' என்று அவர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து இந்தத் தகவல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவின் ஹஜ் பயண மேலாண்மையை ஈரானின் உயரிய மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இழிவாகப் பேசியதைத் தொடர்ந்து இந்தக் கூற்று வெளிப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான ஷியா ஈரானியர்கள் இந்த ஆண்டு நடைபெறும் புனிதப் பயணத்தில் பங்குகொள்ளவில்லை.ராஜீய ரீதியான மோதல்களால் சௌதி அரேபியாவும் ஈரானும் ஹஜ் ஏற்பாடுகள் குறித்து உடன்பாட்டை எட்ட மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

சவுதி ஹஜ் பயணிகளின் பாதுகாப்பிற்கு போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று ஈரான் தெரிவிக்கும் நிலையில் அந்நாடு நியாமற்ற கோரிக்கைகளை வைப்பதாக சவுதி குற்றஞ்சாட்டுகிறது.


இம்முறை ஹஜ் பெருநாள் குத்பாவில் இருந்து விலகிக்கொண்ட சவுதி தலைமை முப்தி ... இம்முறை ஹஜ் பெருநாள் குத்பாவில் இருந்து விலகிக்கொண்ட சவுதி தலைமை முப்தி ... Reviewed by Madawala News on 9/10/2016 11:47:00 PM Rating: 5