Free Space

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர் அந்த வேலையை எவரும் செய்ய முற்படக்கூடாது...

தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்படும் மோதல்களை கூட  இனமோதல்களாக மாற்றி அதில் குளிர்காய சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அவற்றை முறியடிக்க தான் ஒருபோதும் பின் நிற்கபோவதில்லை எனவும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏக்கனாயக குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்தில் சமகாலத்தில் தலைதூக்க முயற்சித்துள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து  மடவளை நியுஸ் அவருடனான பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

இலங்கையில் அண்மைக்காலமாக இரு இனத்தவரிடையே எற்படும் ஏதாவது சிறிய பிணைக்குகளையும் இன ரீதியான மோதலாக மாற்ற சில சக்திகள் திறைமறைவிலும் வெளிப்படையாகவும் இயங்கிவருகின்றன.

நாட்டில் எங்காவது ஒரு  இரு இனத்தவரிடையே ஒரு பிணக்கு ஏற்படும் போது அங்கு இந்த குழுக்கள் சென்று அதனை இனமோதலாக சித்தரித்து அங்கு இரு இனங்களை மோதவிட முயற்ச்சிக்கிறார்கள்.

இரு இனத்தவரிடயே பிணக்குககள் ஏற்படும் போது நாம் அதனையும் சாதாரனமாக சமூகத்தில்  ஏற்படும் பிணக்காகவே நாம் பார்க்கவேண்டும்.அதற்கு இனவாத சாயம் பூசக்கூடாது. இந்த விடயத்தை நான் சகல இனத்தவர்களிடமும் நான் அடிக்கடி கூறிவருகிறேன்.அவற்றை நடுநிலை வகித்து தீர்த்துவைக்கவே நாட்டில் பொலிசும் நீதிமன்றமும் உள்ளது.சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர் அந்த வேலையை எவரும் செய்யமுற்படக்கூடாது.

அண்மையில் கல்ஹின்னை பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலும் பெரும்பான்மையின வாலிபர்கள் சிலர் ஏற்படுத்திய குழப்பத்தின் பின்னணியில் தோன்றிய போதும் அதனை ஒரு இனவாத மோதலாக சித்தரித்து இரு இனங்களையும் மோதவிட சிலர் முயற்சித்தனர்.நாம் அதற்கு எவருக்கும் இடமளிக்கவில்லை.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்....

இரு இனங்களும் சேர்ந்துவாழும் பிரதேசங்களில் இரு இனங்களையும் சேர்ந்த மதகுருமார்கள் சிவில் அமைப்பு அங்கத்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் ஒரு குழுவை அமைத்து மாதம் இருமுறையாவது அவர்களுக்கு இடையே கலந்துரையாடல்களை நடத்தி அங்கு ஏற்படும் பிணக்குகளை தீர்க்கும் திட்டம் ஒன்றிபை அமுல்படுத்த யோசனைமுன்வைத்துள்ளேன். இதனூடாக இனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்படுத்தமுடியும் என தான் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர் அந்த வேலையை எவரும் செய்ய முற்படக்கூடாது... சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர் அந்த வேலையை எவரும் செய்ய முற்படக்கூடாது... Reviewed by Madawala News on 9/20/2016 11:45:00 AM Rating: 5