Free Space

ரமித் ரபுக்வல்லவின் சாரதி அனுமதிப்பத்திரதை ரத்து செய்ய நீதிமன்ற உத்தரவு !

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல கடந்த 22 ஆம் திகதி, மது போதையில் காரை செலுத்தி மரம் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அவருக்கு எதிரான வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது  ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதானமின்றி வாகனம் செலுத்தியமை, விபத்தை தவிர்க்காமை, போதையில் வாகனம் செலுத்தியமை, போலியான இலக்கத் தகட்டைக் கொண்ட வாகனத்தை ஓட்டிச் சென்றமை, மற்றுமொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கறுவாத்தோட்ட பொலிஸாரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

விபத்து இடம்பெற்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட பலூன் சோதனையில் அவர் போதையில் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போக்குவரத்து நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முதல் இரண்டையும் தாம் ஒப்புக்கொள்வதாகவும், ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் நிரபராதி எனவும் ரமித் ரம்புக்வெல்ல சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

விசாரணைகளின் பின்னர் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடைசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். 

எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ரமித் ரபுக்வல்லவின் சாரதி அனுமதிப்பத்திரதை ரத்து செய்ய நீதிமன்ற உத்தரவு ! ரமித் ரபுக்வல்லவின் சாரதி அனுமதிப்பத்திரதை ரத்து செய்ய நீதிமன்ற உத்தரவு ! Reviewed by Madawala News on 9/27/2016 12:50:00 PM Rating: 5