Accaddemy

நாங்க இருக்கோம் ! முஸ்லீம்கள் இனிமேல் அச்சம் கொள்ளத்தேவையில்லை


இலங்கை முஸ்லீம்கள் இனிமேல் அச்சம் கொள்ளத்தேவையில்லை என முன்னாள் அமைசார் அல்ஹாஜ் அஸ்வர் குறிப்பிட்டார்.

நெலும் மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் காரியாளயத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்ட அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்...

கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து முஸ்லீம்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்காக நாம் முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதனூடாக நாம் முஸ்லீம்களின் பிரச்சினைகளுக்கு எதிராக நாம் குரல்கொடுக்க உள்ளோம் .

முஸ்லீம்கள் இனி பயப்படத்தேவையில்லை அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை நாம் வழங்குவோம்.

பதியுதீன் மஹ்மூத் அலவி மவ்லானா போன்றவர்கள் இந்த சமூகத்திற்க்காக அன்று முன்நின்றது போல நாம் சமூகத்திற்காக முன்னிற்போம்.

முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் இனிமேல் முஸ்லீம்கள் அவர்களுடைய எதிர்காலத்தை பற்றி அச்சம் கொள்ளத்தேவையில்லை அதனை நாம் உறுதி செய்வோம் என முன்னாள் ஜனாதிபதி நேரடியாக கூறியுள்ளார்.

எனவே முஸ்லீம்கள் இனிமேல் அச்சம்கொள்ளத்தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாங்க இருக்கோம் ! முஸ்லீம்கள் இனிமேல் அச்சம் கொள்ளத்தேவையில்லை நாங்க இருக்கோம் ! முஸ்லீம்கள் இனிமேல் அச்சம் கொள்ளத்தேவையில்லை Reviewed by Madawala News on 9/28/2016 11:48:00 PM Rating: 5