கொழும்பு நகர் குப்பைகள் ஏகல பிரதேசத்துக்கு !

 

கொழும்பு நகரத்தில் ஒன்று சேரும் குப்பைகளை ஏகல பிரதேசத்தில் கொட்டுவதற்கான சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு கூறியுள்ளது. 

அந்த அனுமதிப்பத்திரம் கிடைத்த உடனேயெ ஏகல பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் குப்பைகளை கொட்டுவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. 

எகல பிரதேசத்தில் குப்பைகளை கொட்டும் அரசின் தீர்மானத்திற்கு எதிராக ஜாஎல மற்றும் ஏகல பிரதேசவாசிகள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

எவ்வாறாயினும், உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் சுற்றாடல் மதிப்பீடுகளின் பின்னரே குப்பைகளை கொட்டுவதற்காக குறித்த பிரதேசம் தெரிவு செய்யப்பட்டதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு கூறியுள்ளது.
கொழும்பு நகர் குப்பைகள் ஏகல பிரதேசத்துக்கு ! கொழும்பு நகர் குப்பைகள் ஏகல பிரதேசத்துக்கு ! Reviewed by Madawala News on 9/27/2016 07:05:00 PM Rating: 5