மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்க வந்த விஷேடவிருந்தாளி மெழுகாக உருகி வடிந்தார் !


கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுவரெலியா சென்றிருந்த போது அவர் அங்கு கால்டன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது அவரை சந்திக்க ஒரு விஷேட விருந்தினர் வருகை தந்துள்ளார்.அவர் வேறு யாருமல்ல ஜனாதிபதி மைத்ரியின் சகோதரர் டட்லி ஸிரிசென ஆவார்.

அங்கு சென்றுள்ள டட்லி சிரிசேன 

"என்ன சேர் நீங்கள் நுவரெலியா வந்து இங்கு தங்கியிருக்குறீர்கள் எமது ஹோட்டலுக்கு வந்திருக்கலாமே'

"பரவாயில்லை டட்லி எனக்கு அவ்வளவு பெரிய இடத்தில்தான் தங்க வேண்டும் என்ற  கட்டாயம் இல்லை.

"இல்லை சார் நீங்கள் அப்படி சொல்வது சரியில்லை"

"இங்கு நல்ல வசதியாகவும் அமைதியாகவும் இருக்கிறது டட்லி ஒரு பிரச்சினையும் இல்லை"

"ஸேர் இனிமேல் இங்கு வந்தால் நீங்கள் எமது ஹோட்டலில் வந்து தங்கவேண்டும்" என முன்னாள் ஜனாதிபதிக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளார்
இந்நாள் ஜனாதிபதியின் சகோதரர்...

நுவரெலியாவில் உள்ள அரலிய கிரீன் ஹில்ஸ் டட்லி சிரிசேனவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டட்லி சிரிசேனவின் சகோதாரின் மகனின் திருமண வைபவத்தில் முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கலந்துகொண்டு பிரதமர் மற்றும் ஜனாதியுடன் ஒன்றாக உணவருந்தி சகஜமாக இருந்தது அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்க வந்த விஷேடவிருந்தாளி மெழுகாக உருகி வடிந்தார் ! மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்க வந்த விஷேடவிருந்தாளி மெழுகாக உருகி வடிந்தார் ! Reviewed by Madawala News on 9/30/2016 07:47:00 PM Rating: 5