சட்டம், ஒழுங்கை பாது­காப்­ப­தற்­காக பாரிய வேலைத்­திட்டம்...

புதிய அர­சாங்கம் ஆட்­சிப் ­பொ­றுப்பை ஏற்றதன் பின்னர் நாட்­டிற்கு மிக­முக்­கிய தேவை­யா­க இருக்கும் சட்டம், ஒழுங்கை பாது­காப்­ப­தற்கு பாரிய வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­வ­தாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர தெரி­வித்­துள்ளார்.

ஒட்­டு­சுட்­டானில் நேற்று ஞாயிற்­றுக்­கிழமை நடை­பெற்ற புதிய பொலிஸ் நிலைய கட்­ட­டத்­தி­றப்பு விழாவில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

150 வரு­டங்­க­ளைக் ­கொண்டு பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கு முக்­கி­ய­மா­ன­தொரு திருப்­ப­மாகும். புதிய அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்­ததன் பின்னர் பொலிஸ் திணைக்­க­ளத்­துக்­காக சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற புதிய அமைச்சை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

ஜனா­தி­பதி ,பிர­தமர் மற்றும் இந்த அர­சாங்கம் நாட்­டுக்கு மிக முக்­கிய தேவை­யாக இருக்கும் சட்டம் ஒழுங்கை பாது­காப்­ப­தற்­காக பாரி­ய­தொரு வேலைத்­திட்­டத்தை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 

அத்­துடன் அர­சாங்கம் மக்­களின் எதிர்­பார்ப்பை நிறைவு செய்­து ­கொள்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டு ­வ­ரு­கின்­றது. அதன் ஓர் அங்­க­மா­கவே ஒட்­டு­சுட்டான் இந்தப் பிர­தே­சத்தில் புதிய பொலிஸ் நிலையம் அமையப் ­பெ­று­கின்­றது. இந்த பொலிஸ் நிலையம் மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­ற ­வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது.

எனவே முக்­கி­ய­மான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்கும் நாங்கள் மக்­க­ளுக்­காக உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த பொலிஸ் நிலையத்தின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

சட்டம், ஒழுங்கை பாது­காப்­ப­தற்­காக பாரிய வேலைத்­திட்டம்... சட்டம், ஒழுங்கை பாது­காப்­ப­தற்­காக பாரிய வேலைத்­திட்டம்... Reviewed by Madawala News on 9/19/2016 10:43:00 AM Rating: 5