Kidny

Kidny

புஸல்லாவை பொலிஸ் காவலில் வாலிபர் தற்கொலை ? இன்று வழக்கு விசாரனைக்கு வந்தது..

(பா. திருஞானம்)
புசல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று (23) கம்பளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணையை ஆரம்பித்த  மாவட்ட, நீதவான் நீதிபதி திருமதி சாந்தனி மீகொட, ரவிசந்திரனின் தந்தையிடமும் அண்ணனிடமும் விசாரணைகளை மேற்க் கொண்டார். பின் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு தற்கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் டீ-சேர்ட்டை பரிசோதனைக்கு உட்படுத்தி சுருக்கு ஒன்றை போடுமாறு சட்டதரணிக்கு பணித்துள்ளார்.

அவ்வாறு சுருக்கு போட்ட போது அந்த சுருக்கில் ஒருவர் தலையை இட்டு தற்கொலை செய்வதற்கான சாத்தியம் இல்லை எனவும், சுருக்கு போட்டு தொங்கி இருந்தால் டீ-சேர்ட்டில் இழுபட்ட அடையாளம் இருந்நிருக்கும் எனவும் ஆனால் அதில் அவ்வாறான தடயங்கள் இல்லை என சந்தேகம் வெளியிட்டார்.

அத்துடன் கழுத்துச் சுருக்கிற்கு மேலதிகமாக, சிறை கதவில் சுருக்கையும் போட்டு கட்டி தொங்குவதற்கு டீ-சேர்ட் போதுமானதாகவும் இருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான், தற்கொலை செய்து கொண்ட இடமான, புசல்லாவை பொலிஸ் நிலையத்தின் சிறைச்சாலையை பார்வையிடுவதற்கு எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணை தொடர்பில் குறித்த நபரின் உறவினர்களிடம் வினவிய போது, இந்த விசாரணை நீதியானதும் நேர்மையானதுமாக இடம் பெற்றது. எங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
புசல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த மேற்படி நடராஜா ரவிசந்திரன் (31) என்ற இளைஞன், குற்றச் செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யபட்டு நீதிமன்றுக்கு அழைக்கபட்டு சமூக சேவை ஒன்றை செய்யுமாறு பணிக்கபட்டிருந்த நிலையில், அதனை முறையாக செய்யாத காரணத்தால் ஹெல்பொட நிதிமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கபட்டிருந்தது.

அதனை அடுத்து, கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி கைது செய்யபட்ட மேற்படி இளைஞன் புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புசல்லாவை வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து (18) புசல்லாவை பிரதேசத்தில் பாரிய பதட்ட நிலை தோன்றியது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கம்பளை பதில் நீதவான சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கும் வைத்தியசாலை பிரேத அறைக்கும் சென்று பிரேதத்தை பேராதெனிய சட்ட வைத்திய நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்புமாறு பணித்திருந்தார்.

அதன் படி பிரேதம் பரிசோதிக்கப்பட்டு, உடற்பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பட்ட பின்னர் பிரேதம் உறவினர்களிடம் (18) கையளிக்கபட்டதோடு, கடந்த 19 ஆம் திகதி, தோட்ட பொது மயானத்தில் பிரேதம் நல்லடக்கம் செய்யபட்மை குறிப்பிடதக்கது.


புஸல்லாவை பொலிஸ் காவலில் வாலிபர் தற்கொலை ? இன்று வழக்கு விசாரனைக்கு வந்தது.. புஸல்லாவை பொலிஸ் காவலில் வாலிபர் தற்கொலை ? இன்று வழக்கு விசாரனைக்கு வந்தது.. Reviewed by Madawala News on 9/23/2016 06:06:00 PM Rating: 5