Free Space

எனது தொலைபேசியையும் ஒற்றுக்கேட்கிறார்கள் !


தனது தொலைபேசியையும் அமைச்சர்கள் ஒற்றுக் கேட்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று குற்றம்சாட்டினார்.

சில அமைச்சர்கள் தான் கூறியதாக சில விடயங்களைத் தெரிவிக்கின்றனர். பின்னர், அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் எனது தொலைபேசியை ஒற்றுக் கேட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடிகின்றது.

தற்பொழுது நாட்டில் ஜனநாயகம் இல்லை. நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒத்துக் கேட்கப்படுகின்றன. நீதிபதிக்கு சுதந்திரமாக தீர்ப்பு வழங்க முடியாதுள்ளது. இந்த நிலைமை இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ மீதான ஊழல் வழக்கு விசாரணையில் கலந்துகொள்வதற்கு இன்று நீதிமன்றத்துக்கு வருகை தந்தபோது ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவித்தார். இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

 

எனது தொலைபேசியையும் ஒற்றுக்கேட்கிறார்கள் ! எனது தொலைபேசியையும் ஒற்றுக்கேட்கிறார்கள் ! Reviewed by Madawala News on 9/30/2016 10:08:00 PM Rating: 5