Kidny

Kidny

முப்­பது வரு­டங்கள் முஸ்லிம் சமூ­கத்­துடன் வாழ்ந்­த­­தை­ய­டுத்தே இஸ்­லாத்தை ஏற்றேன் (எம்.ஐ.அப்துல் நஸார்)
* சவூதி அரே­பி­யா­வுக்­கான பிரித்­தா­னிய தூதுவர் சிமொன் கொலிஸ்
*  மனைவியுடன் புனித ஹஜ்­ஜையும் நிறை­வேற்­றினார்.

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய பத்­தொன்­ப­தா­யிரம் பிரித்­தா­னிய யாத்­தி­ரி­கர்­களுள் பிரித்­தா­னிய தூதுவர் சிமொன் போல் கொலிஸ் மற்றும் அவ­ரது மனைவி ஹுதா முஜார்கெச் ஆகி­யோரும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர்.


அவர் இஸ்­லாத்தைத் தழு­விக்­கொண்­டமை சில இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் மாத்­தி­ரமே தெரிந்­தி­ருந்­தது. ஆனால் அது பற்றி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. 

சவூதி எழுத்­தா­ளரும் கல்­வி­யி­ய­லா­ள­ரு­மான பௌஸியா அல்-பக்ர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தனது டுவிட்டர் பக்­கத்தில் புகைப்­ப­டங்­க­ளுடன் இதனை பதி­வேற்றம் செய்­தி­ருந்தார். இதன் மூலமே தூதுவர்  இஸ்­லாத்தை ஏற்றுக் கொண்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. 

பிரித்­தா­னிய தூதுவர் சிமொன் போல் கொலிஸ் மற்றும் அவ­ரது மனைவி ஆகியோர் இஹ்றாம் உடை அணிந்த நிலையில் காணப்­படும் இரண்டு புகைப்­ப­டங்­களை அவர் பதி­வேற்­றி­யி­ருந்தார். இந்தப் புகைப்­ப­டங்கள் டுவிட்டர், முகநூல், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்­ட­கிராம் ஆகிய சமூக வலைத் தளங்­களில் வேக­மாகப் பர­வி­வ­ரு­கின்­றது.

 பிரித்­தா­னிய தூதுவர் தனது உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்தின் மூலம் பௌசியா அல்-­பக்­ருக்கு  நன்றி தெரி­வித்து பதி­வொன்றை இட்­டி­ருந்தார். பிரித்­தா­னிய தூது­வரின் மனை­வியும் அல்-­பக்ரின் பதி­வினை மீள்­ப­தி­வேற்றம் செய்­தி­ருந்தார்.

கொலிஸ் கடந்த புதன்­கி­ழமை ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிப்­ப­தற்கு மறுப்புத் தெரி­வித்­தி­ருந்­த­போ­திலும், 'முப்­பது வரு­டங்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் வாழ்ந்­ததன் பின்னர், ஹுதாவைத் திரு­மணம் செய்து கொள்­வ­தற்கு முன்­ன­தாக நான் இஸ்­லாத்தைத் தழு­விக்­கொண்டேன்' எனத் தெரி­வித்தார். 

சேர் ஜோன் ஜென்கின்ஸ் இரா­ஜ­தந்­திர சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜன­வரி மாதம் தொடக்கம் சவூதி அரே­பி­யா­வுக்­கான பிரித்­தா­னிய தூது­வ­ராகக் கொலிஸ் கட­மை­யாற்றி வரு­கின்றார். 

 தூது­வ­ருக்கும் அவ­ரது மனை­விக்கும் முதன்­மு­த­லாக இருவர் வாழ்த்துத் தெரி­வித்­தி­ருந்­தனர். இள­வ­ரசர் பஸ்மாஹ் பிந்த் சௌத் 'தூது­வ­ருக்கும் அவ­ரது மனை­விக்கும் விசே­ட­மான வாழ்த்­துக்கள் என குறிப்­பிட்­டி­ருந்­த­தற்கு.

'நன்றி இள­வ­ரசர் பஸ்மாஹ்' என தூதுவர் தனது பதிலில் தெரி­வித்­துள்ளார்.

 இந்தச் செய்தி பிரித்­தா­னிய யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 'வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க தனது ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­றிக்­கொண்ட தூது­வ­ருக்கு எனது வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்றேன்' என பிரித்­தா­னிய ஹாஜி­க­ளுக்­கான சபையின் தலைமை நிறை­வேற்று அலு­வ­ல­ரான றசீட் மொக்­ரா­டியா தெரி­வித்தார்.

'ஈமா­னியப் பய­ணத்தில் ஹஜ்ஜை நிறை­வேற்­றிய ஆயி­ரக்­க­ணக்­கான பிரித்­தா­னிய யாத்­தி­ரி­கர்­களுள் அவரும் ஒரு­வ­ராவார். அவர் எங்­க­ளுக்கு ஊக்கம் தரும் விதத்தில் தனது அனு­ப­வங்­களை எம்­மோடு பகிர்ந்து கொள்வார் என எதிர்­பார்க்­கின்றோம்' என அவர் மேலும் தெரி­வித்தார் 

விசே­ட­மாக மேற்­கு­லகில் இஸ்­லாத்­திற்­கெ­தி­ரா­கவும், முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரா­கவும் மோச­மான பிரச்­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நிலையில், பிரித்­தா­னிய தூதுவர் இஸ்­லாத்தைத் தழு­வி­ய­மை­யினை உல­க­ளா­விய இஸ்­லா­மிய அழைப்பின் சான்­றாக இஸ்­லா­மிய விசு­வா­சிகள் கரு­து­கின்­றனர். 

கொலிஸ் அரபு மொழியில் சர­ள­மாகப் பேசக்­கூ­டி­யவர். 1978 ஆம் ஆண்டு அவர் பிரித்­தா­னிய வெளி­நாட்டு மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­ல­கத்தில் இணைந்தார். அரபு மொழியைக் கற்­றதன் பின்னர் பிர­தா­ன­மாக அரபு நாடு­களில் பணி­யாற்­றினார். 

ஐந்து பிள்­ளை­களின் தந்­தை­யான அவர் முதன் முத­லாக பஹ்­ரை­னுக்­கான இரண்­டா­வது செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார் (1981 -– 1984). ஈராக்­கிற்­கான பிரித்­தா­னியத் தூது­வ­ராக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை கட­மை­யாற்­றி­யுள்ளார். 

சிரி­யா­வுக்­கான பிரித்­தா­னியத் தூது­வ­ராக 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை கட­மை­யாற்­றி­யுள்ளார்.

கட்டாருக்கான பிரித்தானியத் தூதுவராக 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார். 

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை துபாயில் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை பஸ்ராவில் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளதோடு 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை புது டெல்லியில் முதலாவது செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  


முப்­பது வரு­டங்கள் முஸ்லிம் சமூ­கத்­துடன் வாழ்ந்­த­­தை­ய­டுத்தே இஸ்­லாத்தை ஏற்றேன் முப்­பது வரு­டங்கள் முஸ்லிம் சமூ­கத்­துடன் வாழ்ந்­த­­தை­ய­டுத்தே இஸ்­லாத்தை ஏற்றேன் Reviewed by Madawala News on 9/19/2016 01:06:00 PM Rating: 5