Kidny

Kidny

மஹிந்த விட்டுச் சென்ற இடத்திலேயே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் நிலை கொண்டுள்ளன ...


மலை­ய­கத்­தவர் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை மஹிந்த ராஜபக் ஷ விட்டுச் சென்ற இடத்­தி­லேயே அவைகள் இன்­று­முள்­ளன.

 நல்­லாட்சி அர­சாங்கம் இவற்­றுக்கு உரிய தீர்­வினை இன்னும் பெற்றுக் கொடுக்­க­வில்லை என்று தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி தெரி­வித்தார். 

மலை­யக மக்­களின் சம­கால நிலை­மைகள் தொடர்பில் கருத்து தேசிய தமிழ் நாழிதல் ஒன்று அவரிடம் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

இது தொடர்பில் அசாத்­சாலி மேலும் தெரி­விக்­கையில், 

சிறு­பான்மை மக்கள் இந்­நாட்டில் பல்­வேறு நெருக்­கீ­டு­க­ளுக்கும் உள்­ளாகி வரு­கின்­றார்கள். இலங்­கையின் வர­லாற்றில் இது தொடர் கதை­யாகி இருக்­கின்­றது. எனினும் இந்த நெருக்­கீ­டு­க­ளுக்கு உரிய தீர்வு ஆட்­சியில் உள்ள அர­சு­க­ளினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த வகையில் நோக்கும் போது மலை­யக மக்கள் தொடர்­பா­கவும் நாம் இங்கு குறிப்­பிட்டுக் கூற வேண்டி இருக்­கின்­றது. 

மலை­யக மக்கள் இந்­நாட்டில் முக்­கி­யத்­துவம் மிக்­க­வர்­க­ளாக விளங்­கு­கின்­றனர். 

இவர்கள் பல்­வேறு தேவை­க­ளையும் உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலையில் உள்­ளனர். இன்னும் பல்­வேறு அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளையும் அடைய வேண்­டிய தேவை இருக்­கின்­றது. இவைகள் அனைத்தும் உரி­ய­வாறு பெற்றுக் கொடுக்­கப்­ப­டுதல் வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளப் பிரச்­சினை இப்­போது தொடர் கதை­யாகி இருக்­கின்­றது. பல சுற்று பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­ற­போதும் இவை­ய­னைத்தும் தோல்­வி­யி­லேயே முடிந்­தி­ருக்­கின்­றன. சம்­பள உயர்வு இன்னும் சாத்­தி­ய­மா­க­வில்லை. காலங்கள் பேசிப் பேசியே விர­ய­மாக்­கப்­ப­டு­கின்­றன. அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே காணப்­படும் வேறு­பா­டு­க­ளினால் சம்­பள உயர்வு விட­யமும் இழு­ப­றி­யான நிலைக்கு உள்­ளாகி இருக்­கின்­றது. 


தேயிலை விலையின் வீழ்ச்­சி­யினை காரணம் காட்டி சம்­பள உயர்­வினை உரி­ய­வாறு வழங்க மறுப்­பது நியா­ய­மா­ன­தல்ல. முத­லா­ளிமார் இவ்­வி­ட­யத்தில் இத­ய­சுத்­தி­யுடன் செயற்­பட வேண்டும். சம்­பள உயர்வு இழு­ப­றி­யா­கி­யுள்ள நிலையில் அர­சாங்கம் ஒரு தீர்­வினை முன்­வைத்து அத்­தீர்­மா­னத்தை முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தினை ஏற்­றுக்­கொள்ளச் செய்தல் வேண்டும். அர­சாங்கம் விலகி நின்று வெறு­மனே பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. அரா­சங்­கத்தின் தீர்­மானம் என்­பது இதில் முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது.


மலையக மக்­க­ளுக்­கான வீட­மைப்பு தொடர்பில் முக்­கிய கவனம் செலுத்த வேண்டி இருக்­கின்­றது. லயத்து வாழ்க்­கையில் இம்­மக்கள் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றார்கள். எனவே துரி­த­மான முறையில் வீட­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டிய தேவை இருக்­கி­றது. தொழி­லா­ளர்­களின் வீட­மைப்­பிற்­காக ஏழு பேர்ச்சஸ் காணி வழங்­கப்­ப­டு­கின்ற நிலையில். வீட­மைப்பு முழு­மை­பெற இன்னும் பல காலம் காத்­தி­ருக்க வேண்டி இருக்­கின்­றது. 


நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரு­பது மாதங்­க­ளுக்கும் மேலா­கின்­றது. எனினும் சிறு­பான்­மை­யி­னரின் வாழ்க்­கை­யினை பொறுத்­த­வ­ரையில் இது­கா­ல­வரை எவ்­வி­த­மான மாற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. 


மலை­ய­கத்­தவர் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை மஹிந்த ராஜபக் ஷ விட்டுச் சென்ற இடத்­தி­லேயே அவைகள் இன்னும் இருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் இப்­பி­ரச்­சி­னை­களை தீர்த்­து­வைக்க உரிய நட­வ­டிக்­கைகள் எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை. 


சிறு­பான்­மை­யினர் தொடர்பில் கரி­ச­னை­யற்ற நிலை­யி­லேயே நல்­லாட்சி அரசு நடந்து கொள்­வ­தனை அவ­தா­னிக்கக் கூடியதாக உள்ளது. மலையகத்தில் அரசியலும் தொழிற்சங்கமும் பின்னிப் பிணைந்துள்ளன. இந்நிலையில் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் குளிர்காயும் அரசியல் தொழிற்சங்கவாதிகள் அத்தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். சமூகத்தில் அபிவிருத்தியினை ஏற்படுத்த ஆக்கபூர்வமான பங்களிப்பினையும் வழங்குவது அவசியமாகும் என்றார்.

மஹிந்த விட்டுச் சென்ற இடத்திலேயே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் நிலை கொண்டுள்ளன ... மஹிந்த விட்டுச் சென்ற இடத்திலேயே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் நிலை கொண்டுள்ளன ... Reviewed by Madawala News on 9/26/2016 11:28:00 AM Rating: 5