Free Space

இந்த வருடம் சுபநேரம் இல்லை அடுத்த வருடமே ஹை வே நிர்மாணப்பணிகள் ஆரம்பம் !

மூன்று அதிவேக பாதை கட்டுமான பணிகளை ஆரம்பிப்பதற்கு இவ்வருடத்தில் சுப நேரங்கள் இல்லை எனவும் அதனால் இக்கட்டுமானப்பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கண்டி உடுனுவரவில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ...

இவ்வருடம் கண்டி - கொழும்பு , குருநாகல் - தம்புள்ளை , ரதனபுரி - கொழும்பு ஆகிய அதிவேக பாதை கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன அதற்காக சுபமான நேரம் இருக்கவில்லை அதனால் நாம் அதனை வரும் வருடன் 
ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் 

எதிர்வரும் வருடம் ஜனவரியில் சுபநேரத்தில் கண்டி கொழும்பு அதிவேக பாதை வேலைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-கொழும்பு டுடே -


இந்த வருடம் சுபநேரம் இல்லை அடுத்த வருடமே ஹை வே நிர்மாணப்பணிகள் ஆரம்பம் ! இந்த வருடம் சுபநேரம் இல்லை அடுத்த வருடமே ஹை வே நிர்மாணப்பணிகள் ஆரம்பம் ! Reviewed by Madawala News on 9/27/2016 04:26:00 PM Rating: 5