என் நெருங்கிய நண்பர்களில் பலர் முஸ்லீம் நண்பர்களே !

தன்னோடு நெருங்கி பழகியவர்களில் மிக முக்கியமான நெருங்கிய நண்பர்கள் பலர் முஸ்லீம் நண்பர்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 8 ம் திகதி ரத்னபுரியில் நடக்கவுள்ள முன்னாள் ஜனாதியின் கூட்டம் தொடர்பில் கண்டி மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டங்கள் இடன்பெற்றன இதன்போதே அங்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

80 களில் அங்கும்புர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் சட்டத்தரணி நண்பர் ஒருவர் தான் ஒரு பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்த போது தனக்கு உதவியதாகவும் அவர் தற்போது உயிருடன் இல்லை எனவும் தனது வாழ்வில் அவர் போன்ற சிலரை மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

முஸ்­லிம்கள் கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்து எம்­முடன் ஒன்று சேருங்கள். நாம் அமைக்­க­வுள்ள ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பும் ஏனைய சமூ­கங்­களைப் போல் சகல உரி­மை­களும் வழங்­கப்­படும் என மஹிந்த தரப்பினர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
என் நெருங்கிய நண்பர்களில் பலர் முஸ்லீம் நண்பர்களே ! என் நெருங்கிய நண்பர்களில் பலர் முஸ்லீம் நண்பர்களே ! Reviewed by Madawala News on 9/24/2016 11:37:00 PM Rating: 5