கல்ஹின்னை பதட்ட நிலையை கருத்தில் கொண்டு அமைச்சர் ஹலீம் உடனடியாக நாடு திரும்புகிறார்...


ஹாரிஸ்பத்துவ - கல்ஹின்ன பிரதேசத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் காரணமாக ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை கருத்தில் கொண்டு ஹஜ் கடமைகளுக்காக சவுதி அரேபியா சென்றுள்ள அமைச்சர் ஹலீம் உடனே நாடு திரும்புவதாக சற்றுமுன் குறிப்பிட்டார்.

கல்ஹின்னை பதட்ட நிலை தொடர்பில் மக்காவில் இருந்து மடவளை நியுசுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனை அவர் குறிப்பிட்டார்.

தற்போது கல்ஹின்னைக்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதும் குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான சிலர் வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிற்சைபெற்று வருகின்றனர்.அவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்களாவர்.

தற்போது பொலிஸார் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளபோதும் இந்த சம்பவம் நிரந்தரமாக முடிவுக்கு வரவேண்டிய தேவை உள்ளது.

பெரும்பான்மை மக்கள் சூழவாழும்  கல்ஹின்னை பிரதேசம் அமைந்துள்ள ஹாரிஸ்பத்துவ தொகுதி ஐ தே க அமைப்பாளரான அமைச்சர் ஹலீம் நாடு திரும்பி இந்த விடயத்தில் தலையிட்டு இந்த பிரச்சினையை நிரந்தமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அவர் நாடு திரும்புவாதாக தெரிவிக்கப்படுகிறது.


கல்ஹின்னை பதட்ட நிலையை கருத்தில் கொண்டு அமைச்சர் ஹலீம் உடனடியாக நாடு திரும்புகிறார்... கல்ஹின்னை பதட்ட நிலையை கருத்தில் கொண்டு அமைச்சர் ஹலீம் உடனடியாக நாடு திரும்புகிறார்... Reviewed by Madawala News on 9/16/2016 02:04:00 AM Rating: 5