Kidny

Kidny

மலேசிய உயர்ஸ்தானிகர் விடயத்தில் நல்லாட்சி அரசு அசமந்தப்போக்கு ...

மலேஷியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் மீதான காடையர்களின் தாக்குதல் குறித்து நல்லாட்சி அரசு எதுவித  நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் இப்றாஹீம் அன்சாரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ, இலங்கைக்கான தூதரகத்திற்கோ, அங்குள்ள பௌத்த விகாரைகளுக்கோ இதுவரை மலேசிய அரசு எத்தகைய பாதுகாப்பையும் வழங்காத நிலையில், தூதுவரின் குடும்ப உறவினர்களும், இலங்கையைச் சேர்ந்தவர்களும் அச்சத்துடன் இருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் தமது பணி நிமித்தம் விமான நிலையம் சென்றிருந்த போதே அவர் தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அமைச்சர் தயா கமகே அவர்கள் மலேசியாவில் இருந்து  நாடு திரும்பும் போது அவரை பின்தொடர்ந்து வந்த விடுதலை புலி ஆதரவாளர்களே அவரை விமான நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.குறித்த தாக்குதல் தொடர்பான சீ சீ டி வி வீடியோ உலக அளவில் கடும் விமர்சனங்களை எற்படுத்தியிருந்த போதும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது இலங்கை வெளிநாட்டு அமைச்சரோ இம்ராஹின் அன்சார் அவர்களை இதுவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரிக்கவிக்லை என மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கட் அணி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற போது அனித்தலைவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்ந்து தெரிவித்த இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு இலங்கையை மலேசியாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ஸ்தானிகரை நலம் விசாரிக்க முடியாமல் போனது தொடர்பில் முஸ்லீம் அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

தற்போது மலேசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரனைகளின் படி குறித்த தாக்குதல் நடத்திய குழு போலி தமிழ் தேசியவாதி சீமானின் நாம் தமிழர் அமைப்பின் கைக்கூலிகள் என்பது உறுதியாகியுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு இராஜதந்திரியின் கௌரவம் மதிக்கப்படல் வேண்டும், எதிரியின் தேசத்திற்குள்ளும் ஒரு தூதுவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது சகல உலக நாகரீகங்களினதும் வழக்காறாகும்.இந்த சூழ்நிலையில் சர்வதேச சட்டங்களை மதிக்கும், வியன்னா தூதாண்மை நியமங்களை மதிக்கும் சகல உள்நாட்டு பிறநாட்டு தமிழ்த் தலைமைகளும் மேற்படி தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு உயர் ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் அவர்களிடம் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஆட்சியை தக்கவைப்பதில் பிசியாகிப்போயுள்ள நல்லாட்சி அரசுக்கு முஸ்லீம்களின் பிரச்சினைகள் தொடர்பில் வாய்திறக்க நேரம் இல்லாத போது உயர்ஸ்தானிகர் விடயத்தில் ஞாயமாக வாய் திறக்க நேரம் இருக்காது...

சவுதி அரேபியா , இந்தோனேசியா , எகிப்து உள்ளிட்ட   நாடுகளில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றியுள்ள அவர் ஒரு துறைசார் இராஜதந்திரியாவார், அவரது நியமனம் அரசியல் நியமனம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த காலங்களில் தமது விடுதலை போராட்டத்தை சர்வதேச பிராந்திய சக்திகளின் அரசியல் இராஜ தந்திர நலன்களிற்கு பலிக்கடாவாக்கிய சில சக்திகள் மீண்டும் ஒருமுறை இலங்கை வாழ் தமிழ் மக்களை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்வதனை அனுமதிக்க முடியாது.

போருக்குப் பின்னரான இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டு வரும் நம்பிக்கை தரும் மாற்றங்களுக்கு குந்தகங்களை ஏற்படுத்திவரும் தீய சக்திகளுக்கு சந்தர்பங்களை சாதகமாக்கிக் கொடுக்கும் முட்டாள்தனமான கைங்கரியமாகவே மேற்படி தாக்குதலை கருதமுடியும்.
மலேசிய உயர்ஸ்தானிகர் விடயத்தில் நல்லாட்சி அரசு அசமந்தப்போக்கு ...  மலேசிய உயர்ஸ்தானிகர் விடயத்தில் நல்லாட்சி அரசு அசமந்தப்போக்கு ... Reviewed by Madawala News on 9/06/2016 11:42:00 PM Rating: 5