தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தி தீர்வை பெற்றுக்கொள்வோம் : அப்துல் சத்தார்...

உடனடியாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்தக்கோரிய மனு ஒன்றை  கூட்டு எதிர்கட்சி ஆதரவு உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்று தேர்தல் ஆணையாளர் காரியாளத்தில் கையளித்துள்ளனர்.

குறித்த மனுவை கையேற்க தேர்தல் ஆணையாளர் அங்கு இருக்காத காரணத்தால் செயளாலர் அதனை கையேற்றுள்ளார்.

இது தொடர்பில் மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட குருநாகல் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார்.

நாளைய தினம் உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்கள் குழு ஒன்று தேர்தல் ஆணையாளரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை உடன் நடத்த கோரிக்கை முன்வைக்கவுள்ளதாகம்  குறிப்பிட்டார்.

நாளைய தினம் தேர்தல் ஆணையாளர் தங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவொன்றை பெற்றுத்தர தவறும்பட்சத்தில் தேர்தலை பெற்றுக்கொள்ள தொடச்சியாக போராட்டம் நடத்த கூட்டு எதிர்கட்சியினர் தீர்மாணித்துள்ளதாக அவர் மேலும் குறிபிட்டார்.


தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தி தீர்வை பெற்றுக்கொள்வோம் : அப்துல் சத்தார்... தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தி தீர்வை பெற்றுக்கொள்வோம் : அப்துல் சத்தார்... Reviewed by Madawala News on 9/20/2016 04:49:00 PM Rating: 5