மலேசியா ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை..


மலேசியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமாக விளங்கும் ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று(6) செவ்வாய்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
.

மலேசியா பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போவில் அம்ஜேயா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலேசியா ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தோடு மலேசியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களும், பிரதித்தலைவர் ஹிஸ்புழ்ழாஹ் அகமட் ஹிராஸ் அவர்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திட்டார்கள்.
.

இந்நிகழ்வில் ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகள், மலேசியா பேராக் மாநில முதலமைச்சர் சாம்பிரி அப்துல் காதிர், மலேசியா கல்வி அமைச்சர் மஹ்ஷிர் ஹாலித், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் உற்பட மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி அதிகாரிகளும் கல்வியாளர்களும் கலந்து-கொண்டார்கள்.

முஹம்மத் ஹம்ஸா.
மலேசியா ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை.. மலேசியா ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை.. Reviewed by Madawala News on 9/07/2016 12:47:00 AM Rating: 5