கல்ஹின்னை மோதல் சம்பவம் குறித்து பிரதமர் விஷேட கவனம் !

கல்ஹின்னை மோதல் சம்பவம் மற்றும் நேற்று இரவு பள்ளிவாயல் மீதான கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க நேரடி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்ஹின்னை மோதல் குறித்து பல தரப்புகள் ஊடாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள  அதேவேளை நேற்று பள்ளிவாயல் கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயளாலர் பொலிஸ். மா அதிபர் மற்றும் அரச உயரதிகாரிகளுடன் தொடர்ப்புகொண்டுள்ள அதேவேளை இந்த விடயம் தொடர்பில் பிரதமரை தொடர்புகொண்டு தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குறித்த மோதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அங்கும்புர பிரதேச சபை ஐ தே க முன்னாள்  உறுப்பினர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரனை நடத்துவதாக பிரதமர் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று காலை மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் அவர்களை தொடர்பு கொண்டுள்ள பிரதமர் மோதல் சம்பவம் தொடர்பான விடயங்களை  நேரடியாக கேட்டரிந்துகொண்டுள்ள போது.

சம்பவ முதல் நாள் முதல் தானும் சக மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தாரும் பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பில் இருந்துகொண்டு களத்தில் இருப்பதாக எடுத்துக்கூறியுள்ளர்.



கல்ஹின்னை மோதல் சம்பவம் குறித்து பிரதமர் விஷேட கவனம் ! கல்ஹின்னை மோதல் சம்பவம் குறித்து பிரதமர் விஷேட கவனம் ! Reviewed by Madawala News on 9/16/2016 10:11:00 AM Rating: 5