Accaddemy

தேர்தலை எதிர்கொள்வது எப்படி? மஹிந்த தலைமையில் ஹோமாகமவில் இன்று விஷேட கூட்டம்


(லியோ நிரோஷ தர்ஷன்)

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்கொள்­வது தொடர்­பான கூட்டு எதிர்க் கட்­சியின் கூட்டம் ஒன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் ஹோமா­கமவில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன இந்த கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் கலந்து கொள்­ள­வுள்­ளனர். 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான அறி­வித்­தல்­களை அர­சாங்கம் வெளி­யிட்­டுள்ள நிலையில் அடுத்த வருடம் ஜன­வரி மாத இறு­தியில் அல்­லது பெப்­ர­வரி மாதம் முதல் வாரத்தில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. 

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இணைந்து தேர்­தலில் போட்­டி­யி­டாமல் தனித்து போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் கூட்டு எதிர் கட்­சி­யினர் முன்­னெ­டுத்­துள்­ளனர். 

இத­ன­டிப்­ப­டையில் ஆரம்­பக்­கட்ட தயார்­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுத்­துள்ள மஹிந்த அணி­யினர் இன்று ஹோமா­கம பகு­தியில் ஆத­ர­வா­ளர்­களை சந்திக்க உள்ளனர். உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்திய முதலாவது கூட்டம் ஹோமாகமவில் இடம்பெறுகின்றது.

தேர்தலை எதிர்கொள்வது எப்படி? மஹிந்த தலைமையில் ஹோமாகமவில் இன்று விஷேட கூட்டம் தேர்தலை எதிர்கொள்வது எப்படி?  மஹிந்த தலைமையில் ஹோமாகமவில் இன்று விஷேட கூட்டம் Reviewed by Madawala News on 9/10/2016 11:12:00 AM Rating: 5