Accaddemy

வெலிகடை சிறைச்சாலை ஹொரனைக்கு செல்கிறது !


வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை, தொரணவத்தை பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதற்கு தேவையாக காணியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.


இதற்காக 28 ஏக்கர் காணி, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள 38 ஏக்கர் காணியை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெலிகடை சிறைச்சாலை ஹொரனைக்கு செல்கிறது ! வெலிகடை சிறைச்சாலை ஹொரனைக்கு செல்கிறது ! Reviewed by Madawala News on 9/14/2016 08:21:00 PM Rating: 5