வடமாகாண சபையில் இரண்டு விடுதலை புலி உறுப்பினர்கள் உள்ளனர்...


புலி பயங்கரவாதம் நாட்டில் இல்லை என எதிர் கட்சித் தலைவர் கூறி வந்த போதும் வட மாகாண சபையில் இரண்டு விடுதலை புலி உறுப்பினர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் அஸ்வர் குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடன்பெற்ற கூட்டு எதிர்கட்சி ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்...

புலி பயங்கரவாதம் நாட்டில் இல்லை என எதிர் கட்சி தலைவர் சம்பந்தன் கூறி வந்த போதும் வட மாகாண சபையில் இரண்டு விடுதலை புலி உறுப்பினர்கள் உள்ளனர் இருவர் சிவாஜிலிங்கம் மற்றவர் வடமாகான முதல்வர் விக்னேஸ்வரன்.

மலேசியாவில் உயர் ஸ்தாணிகர் தாக்கப்பட்டுள்ளார். அந்த தாக்குதலை மேற்கொண்டவர்களுள் இலங்கையர்கள் யாரும் இல்லை என அரசு கூறியது , ஆனால் அவர்களும் ஒருவர் இலங்கையில் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இந்த அரசினால் விடுதலை செய்யப்பட்டவர்.

இதற்கு அரசு என்ன விளக்கம் சொல்லபோகிறது என அவர் கேள்வி எழுபினார்.


வடமாகாண சபையில் இரண்டு விடுதலை புலி உறுப்பினர்கள் உள்ளனர்... வடமாகாண சபையில் இரண்டு விடுதலை புலி உறுப்பினர்கள் உள்ளனர்... Reviewed by Madawala News on 9/08/2016 06:44:00 PM Rating: 5