Yahya

மரண தண்டனைக் கைதிக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை...


முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் அண்­மையில் வழங்­கப்­பட்ட மரண தண்­டனைத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்­நாட்டு மக்கள் மத்­தியில் மரண தண்­டனைத் தீர்ப்­புக்கு இலக்­காகும் நபர் குறித்த அவ­தானம் மீண்டும் ஒரு­முறை மேலோங்­கி­யி­ருக்­கி­றது.
.
முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா மேற்­படி மரண தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டையே கதா­நா­ய­க­னாக விளங்­கு­வ­தே இந்த விடயம் குறித்து மக்கள் பர­ப­ரப்­பாகப் பேசு­வ­தற்கு கார­ண­மாகும்.
.
மரண தண்­டனைக் கைதி­யாக வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட துமிந்த சில்­வா­வுக்கு ஏனைய சிறைக் கைதி­க­ளுக்குக் கிடைக்­காத வரப்­பி­ர­சா­தங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக ஒரு சில இணையத்­த­ளங்கள் தகவல் வெளி­யிட்­டி­ருக்­கின்­றன.
அவ்­வாறு நடக்க முடி­யுமா? மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி ஒரு­வரை வழி நடத்­தக்­கூ­டிய சிறைச்­சாலை சட்­ட திட்­டங்கள் எவை? போன்ற விட­யங்­களைத் தேடிப்­பார்ப்­ப­தற்­காக நாம் குறித்த சிறைச்சா­லைக்குச் சென்று அங்­குள்ள பல இடங்­க­ளையும் பார்­வை­யிட்டு அதி­கா­ரி­க­ளு­டன் உரை­யா­டி­னோம்.
.
அதன்­போது வெலிக்­கடைச் சிறைச்­சாலை ஆணை­யாளர் துஷார உபுல் தெனியவிடம் இது­பற்றி வின­விய போது, “தற்­போது பெரும்­பா­லான பொய் வதந்­திகள் பரவிக் கொண்­டி­ருக்­கின்­றன.
.
அவை எதிலும் உண்­மைத்­தன்மை இல்லை என்றே எம்மால் உறு­தி­படக் கூற முடியும்” என்று பதிலளித்த அவர், குற்­ற­வியல் பிரி­வுக்குப் பொறுப்­பான கவீந்­திர பிரே­ம­வங்ஸ என்­பவரைச் சந்­திக்­கு­மாறு இக்­கு­ழுவைக் கேட்டுக் கொண்டார்.
.
அதற்­கி­ணங்க கவீந்­திர பிரே­ம­வங்­ஸவைச் சந்­தித்த போது அவர் கூறி­ய­தா­வது, எமது நாட்டு சட்­டங்­க­ளுக்­க­மைய மனித படு­கொலை அல்­லது ஹெரோயின் போதைப்­பொருள் இரண்டு கிரா­முக்கு மேலாக தன்­னிடம் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்ட குற்­ற­வாளி ஆகி­யோ­ருக்கே மரண தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது.
.
இவ்­வாறு மரண தண்­டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்­கிய 24 மணி நேரத்­திற்குள் குறித்த கைதி சிறைச்­சா­லைக்கு கொண்டு வரப்­பட வேண்டும். இதுதான் முதன் முதலில் மேற்­கொள்ள வேண்­டிய சிறைச்­சா­லைக்­கு­ரிய பணி­யாகும். தொடர்ந்து அவர் தொடர்­பான அறிக்­கை­யொன்று தயா­ரித்தல் இதனை ‘தொரடு சட­ஹன’ கத­வடி அட்­ட­வணை என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. அதனை தொடர்ந்து மரண தண்­டனைத் தீர்ப்பு, விரல் அடை­யாளம், மரண தண்­டனைக் கைதியின் உடலில் காணப்­படும் விசேட அடை­யா­ளங்கள் என்­ப­னவும் பரிசோதிக்கப்பட்டு பதி­யப்­ப­டு­கின்­றன. குறித்த கைதியைப் பொறுப்­பேற்கும் ஜெயிலர்கள் இரு­வ­ராலேயே இவை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.
.
மேற்­படி கைதிக்கு மரண தண்­டனை நிறை­வேற்றும் வரை இந்த இரு ஜெயி­லர்­க­ளுமே பொறுப்­பாக இருப்­ப­து­டன் தண்­டனை நிறை­வேற்றும் போது ஆளை உறு­திப்­ப­டுத்தும் பொறுப்பும் இவர்கள் இரு­வ­ரை­யுமே சாரும்.
மேற்­கண்ட அறிக்­கைகள் யாவும் பூர்த்தி செய்­யப்­பட்­டதன் பின்னர் குற்­ற­வாளி சிறைச்­சா­லைக்குப் பொறுப்­பான வைத்­திய அதி­கா­ரி­யிடம் அழைத்துச் செல்­லப்­ப­டுவார். அவர் பூரண வைத்­தியப் பரி­சோ­த­னையை மேற்­கொள்வார். சிறைச்­சா­லைக்குள் நுழை­யும் போது குறித்த கைதி நல்ல உடல் ஆரோக்­கி­யத்­துடன் இருக்கின்றார் என்­பது இதன் மூலம் உறுதி செய்­யப்­ப­டு­கி­றது.
.
இதன் பின்னர் சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ரிடம் குற்­ற­வாளி ஒப்­ப­டைக்­கப்­ப­டுவார். இந்த சந்­தர்ப்­பத்­தில்தான் “நீதி மன்ற தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்யும் உத்­தேசம் உண்டா?” என்று குற்­ற­வா­ளி­யிடம் அந்த அத்­தி­யட்­சகர் வின­வுவார். இந்த அப்பீல் மனு எவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­டு­வது என்­பது குற்­ற­வா­ளியின் விருப்­பத்­திற்கே விடப்­ப­டு­கி­றது. இது அவ­ருக்­குள்ள உரி­மை­யாகும்.
.
இந்த அடிப்­ப­டையில் சம்­பந்­தப்­பட்ட அனைத்து கடிதக் கோவை­களும் தயார் செய்த பின்னர் குறித்த சிறைக் கைதி 9 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட சிறைக்­கூடம் ஒன்றில் அடைக்­கப்­ப­டுவார். பொது­வாக இலங்­கையின் வரை­ப­டத்தை சரி­யாக இரண்டு பாதி­யாகப் பிரித்தால் மாத்­த­றை­யி­லி­ருந்து மேல்­மா­காண கடைசி எல்­லை­யான கம்­பஹா மாவட்டம் வரை­யி­லான நீதி மன்றம் ஒன்றில் மரண தண்­டனை விதிக்­கப்­படும் குற்­ற­வாளி ஒருவர் வெலிக்­கடை சிறைச்­சா­லை­யில்தான் தடுத்து வைக்­கப்­ப­டுவார். அதே போன்று கேகாலை மாவட்­டத்­தி­லி­ருந்து யாழ்ப்­பாணம் வரை­யி­லுள்ள நீதி மன்றம் ஒன்றில் மேற்­படி தீர்ப்பு வழங்­கப்­படும் கைதிக்கு போகம்­பர சிறைச்­சா­லையே உரித்­து­டை­ய­தா­கி­றது.
.
இந்த சிறைச்­சா­லை­களில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் கைதிகள் இங்கு சுக­போகம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்று ஒரு சிலர் எண்­ணு­வதை அறிய முடி­கி­றது. ஆனால் அதில் எத்­த­கைய உண்­மையும் இல்லை.
.
9x6 அடி பரப்­ப­ள­வுள்ள சிறை அறைக்குள் எத்­த­கைய விசேட வச­தி­களும் இல்லை. அவர்கள் பாய் ஒன்­றில்தான் படுத்­து­றங்க வேண்டும். மூட்­டைப்­பூச்சி, நுளம்புத் தொல்­லை­களில் இருந்து கூட பாது­காத்துக் கொள்­ள எந்த வாய்ப்பும் அங்­கில்லை. மல­சல உபா­தை­க­ளுக்குக் கூட பாத்­திரம் ஒன்றே அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கி­றது. அந்தக் கழி­வைக்­கூட அவ­ரேதான் அப்­பு­றப்­ப­டுத்த வேண்டும். அதுவும் அவ­ருக்கு தினம் வழங்­கப்­படும் ஒரு மணி நேர கால அவ­கா­சத்­தி­லேதான் நிறைவேற்றிக்கொள்ளவும் வேண்டும்.
.
அதே­போன்று துணி­களைத் துவைத்துக் கொள்­வதும் அவ­ரே. அத­னை குறித்த அதே கால எல்­லைக்குள் செய்துகொள்ள வேண்டும்.
.
சிறை கூடத்­தி­லி­ருந்து ஒரு மணி நேர அவ­கா­சத்தில் வெளியே வந்­தாலும் அந்த குறு­கிய எல்­லைக்குள் இருந்து வெளியே செல்ல வழியே இல்லை. அந்த இடத்­தி­லி­ருந்து வெளியே செல்­வ­தற்கு நாள் ஒன்­றுக்கு அரை மணி நேரமே வழங்­கப்­ப­டு­கி­றது. அது உடற்­ப­யிற்சி செய்­வ­தற்­கா­கவே கொடுக்­கப்­ப­டு­கி­றது.
மரண தண்­டனைக் கைதிக்கு சிறைச்­சா­லை­யி­லி­ருந்து வழங்­கப்­ப­டு­வதைத் தவிர வெளி­யி­லி­ருந்து வேறு எதுவும் கொண்டு வந்து கொடுப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை.
.
அவ­ருக்கு அன்­றாட தேவைக்­காக மேல், கீழ் ஆடைகள் அதாவது கோடுபோட்ட கட்டக்கை ரீ சேர்ட், ஜம்பர் காற்சட்டை, பாய், மல­சலம் கழிக்க பாத்­திரம், வாளி, சவர்க்­காரம், சீப்பு, தலை­யணை, பற்­பசை இவற்றைத் தவிர வேறு எதுவும் சிறைச்­சா­லையால் வழங்­கப்­ப­டு­வ­தில்லை.
.
வீட்­டார்கள், உற­வி­னர்கள், நண்­பர்கள் எவ­ரேனும் குறித்த கைதியைப் பார்­வை­யிட வாரத்­திற்கு ஒரு முறையே சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டு­கி­றது. அதுவும் அரை மணி நேரமே. விசேட தினங்­க­ளுக்கு கால வரை­ய­றை­யில் சலுகை வழங்­கப்­ப­டு­கி­றது. சிறைக்­கை­திகள் தினம், சுதந்­திர தினம், வெசாக் தினம், புது­வ­ரு­ட­தினம், கிறிஸ்மஸ் போன்ற விசேட தினங்­களே அத்­த­கைய சலுகை வழங்கும் நாட்­க­ளாகும்.
.
அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இக் கைதிகளை பார்­வை­யி­டவும் விசேட சலுகை இருக்­கி­றது. அதற்­கி­ணங்க பகல் வேளையில் எந்த நேரத்­திலும் வந்து சந்­திக்க அவர்­களால் முடியும். குறிப்­பிட வேண்­டிய மற்­றொரு விசேட அம்சம் என்­ன­வென்றால் தீராத நோயினால் பீடிக்­கப்­பட்ட கைதி­யொ­ரு­வ­ருக்கு உரிய நேரத்தில் குறித்த மருந்தை உட்­கொள்ள இங்­குள்ள ஜெயி­லர்கள் வழங்­கு­வார்கள். அத்­துடன் தேவை­யேற்­படின் வைத்­தி­யரின் உத­வி­யையும் பெற்றுக் கொள்­ளலாம்.
.
இங்கு தர­மான உண­வுகள் பரி­மா­றப்­ப­டு­வ­தாக பெரும்­பா­லானோர் நினைக்­கி­றார்கள்.
.
அதுவும் தவறு. அப்­படி எதுவும் நடப்­ப­தில்லை. குறித்த சிறைக் கைதி­க­ளுக்­கென்றே உணவு அட்­ட­வ­ணை­யொன்று இருக்­கி­றது. காலையில் 110 கிராம் பாண் அல்­லது இரண்டு அகப்பை சோறு, தேங்­காய்ச்­சம்பல் இரண்டு கரண்டி, தேநீர் சாயம் ஒரு கோப்பை. பகல் வேளையில் 225 கிராம் சோறு, 28 கிராம் சுண்டல், 56 கிராம் மரக்­கறி, 58 கிராம் மீன்,
மாலையில் தேநீர் சாயம் ஒரு கோப்பை, இரவு வேளையில் 180 கிராம் சோறு, கிழங்கு வகையைச் சேர்ந்த மரக்­கறி 85 கிராம், 56 கிராம் இறைச்சி. இவைதான் மரண தண்­டனைக் கைதிகள் அனை­வ­ருக்கும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதனைத் தவிர பெரு­நாட்கள், வெசாக், கிறிஸ்மஸ் போன்ற விசேட தினங்­களில் காலையில் பாற்­சோறு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கி­றது.
.
காலை­யிலும் மாலை­யிலும் கொடுக்கும் தேநீர் சாயத்­திற்கு சிறி­த­ளவு சீனி வழங்­கப்­ப­டு­கி­றது அவ்வளவுதான். இன்று வரையில் இலங்­கையில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள 1045 கைதிகள் சிறைச்சாலைகளில் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களுள் 710 கைதிகள் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள தண்­டனை குறித்து மீள் பரி­சீ­ல­னைக்­காக அப்பீல் செய்­தி­ருக்­கி­றார்கள்.
.
இந்த வகையில் 578 கைதிகள் வெலிக்­கடைச் சிறைச் சாலையில் இருக்­கின்­றனர். இவர்­களில் 347 கைதிகள் அப்பீல் மனுத்­தாக்கல் செய்­தி­ருக்­கி­றார்கள். சாதா­ர­ண­மாக மேற்­கண்ட தொகை­யினர் சிறைச்­சா­லையில் அடைக்­கப்­பட்­டி­ருப்­பதால் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக இட­நெ­ருக்­க­டியே பெரும் தலை­யி­டி­யாக இருக்­கி­றது.
இத்­த­கைய இட நெருக்­கடி கார­ண­மாக மஹர, மாத்­தறை, பதுளை ஆகிய பகு­தி­களில் உள்ள சிறைச்­சா­லை­க­ளுக்கு மரண தண்­டனைக் கைதிகள் மாற்­றப்­பட்­டுள்­ள­மையும் இங்கு குறிப்­பி­டவேண்டும். தூக்­கி­லிட்டு கொல்­லு­வ­தற்கு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ள சிறைக் கைதிகள் பிரத்­தி­யே­க­மாக அமைக்­கப்­பட்­டுள்ள சிறைக் கூடத்­தி­லேயே அடைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இது ‘வெபல் பிரிவு’ என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.
.
சிறைச்­சா­லை­களில் இத்­த­கைய புறம்­பான பகுதி சீ – 3 வார்ட் என்று அழைக்கப்படுகிறது. தற்­போது தூக்­கி­லிடும் கைதி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதால் ஏ – 3 , பீ – 3 என்று புதிய வார்ட் பகு­திகள் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
.
மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் வரையில் இந்த சிறைக் கைதிகள் மேற்­கண்­ட­வாறே தம் வாழ்நாளைக் கடத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
.
இதில் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் ஏதும் சலுகைகள் வழங்கப்படும் பட்சத்திலேயே இவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியும்.
.
அல்லது மேன் முறையீட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டால் சுதந்திரமாக வெளியே வரலாம்.
இவற்றைத் தவிர ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் தண்டனையிலிருந்து விடுபட்டு வெளியே வரமுடியும்.
.
குறித்த சிறைக் கைதி இயற்கையாக மரணமடைந்தால் அவரது பூதவுடலை குடும்பத்தார் பொறுப்பேற்க சிறைச்சாலை நிருவாகம் நடவடிக்கைகளைச் செய்து கொடுக்கும்.
.
அவ்வாறு யாரும் பொறுப்பேற்க முன்வராத நிலையில் அவரது இறுதிக் கிரியைகளை அரச செலவில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று இவ்வாறு மரணம் சம்பவிக்கும் சந்தர்ப்பங்களில் நீதிமன்ற வைத்தியர் ஒருவர் மூலம் மரண பரிசோதனை செய்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.

(லக்­பிம பத்­தி­ரி­கையில் சமன்
பிர­யங்­கர எழு­திய கட்­டு­ரையை தழுவியது)
மரண தண்டனைக் கைதிக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை... மரண தண்டனைக் கைதிக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை... Reviewed by Madawala News on 9/25/2016 05:27:00 PM Rating: 5