Free Space

யுத்தத்தின் மத்தியில் நாட்டை கொள்ளையடித்தவர்களை காப்பாற்ற இவ்வரசு தலையிடாது...


பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்  
யுத்தம் நடைபெற்ற சமயத்தில் யுத்தத்திற்குள் மறைந்து களவாடிய நபர்களை காப்பாற்றுவதற்கு இவ்வரசு தலையீடுகளை மேற்கொள்ளாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கொலொன்னாவை பிரதேசத்தில் நடைபெற்ற குறுக்கு பாதைகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார்.  

அவர் மேலும் கூறுகையில், கடந்த அரசில் அங்கம் வகித்தவர்கள் 2009 மே மாதம் யுத்தத்தை முடித்து வைத்ததாக கூறுகிறார்கள்.யுத்தத்தை முழுமையாக நிறைவு செய்ததாகவும் கூறுகிறார்கள். யுத்தத்தை முழுமையாக முடித்துவிட்ட நம்பிக்கை இருந்தால் அவர்கள் கூக்குரலிட வேண்டிய அவசியமில்லை.

விசேடமாக கம்மன்பில் அவர்கள் ஒவ்வொரு நாளும் புலி வருவதாக கூறுகிறார். யுத்த வீரர்கள் வேட்டையாடப்படுவதாக கூறுகிறார். 2015 ஜனவரி 9ம் திகதியின் பின்னர் எல்டிடிஈ இயக்கத்திற்கு எதிராக யுத்தம் செய்ததற்காக அல்லது அவர்களது ஆயுதங்களை எரித்தமைக்காக அல்லது வட-கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றிக் கொண்டமைக்காக எந்த ஒரு யுத்த வீரராவது சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரா என நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். 

யுத்தத்தில் ஈடுபட்ட யுத்த வீரர்களை கௌரவப்படுத்தும் இவ்வரசு, யுத்தத்தின் மத்தியில் களவாடிய நபர்களை காப்பாற்ற உண்மையாகவே விரும்பவில்லை. யுத்தத்திற்குள் மறைந்து கொண்டு லசந்த, பிரகீத் மற்றும் தாஜூடினை கொன்றவர்கள் உள்ளனர். 

யுத்தத்திற்குள் மறைந்து கொண்டு தங்கத்தை களவாடியவர்கள் மற்றும் மிக் விமான கொள்வனவில் ஊழல் செய்தோர் இருக்கின்றனர். இவ்வாறு யுத்தத்திற்குள் மறைந்து கொண்டு களவாடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், அது உண்மையாகவே யுத்தத்தில் போராடிய யுத்த வீரர்களுக்கு இழைக்கும் துரோகமாக அமையும்.

உண்மையாகவே யுத்தத்தில் ஈடுடபட்ட யத்த வீர்கள் சிறையிலிடப்படவுமில்லை, சிறையிலிடப்படவும் மாட்டார்கள் என்பதை அழுத்தமாக இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். 
 
யுத்தத்தின் மத்தியில் நாட்டை கொள்ளையடித்தவர்களை காப்பாற்ற இவ்வரசு தலையிடாது... யுத்தத்தின் மத்தியில் நாட்டை கொள்ளையடித்தவர்களை காப்பாற்ற இவ்வரசு தலையிடாது... Reviewed by Madawala News on 9/15/2016 10:13:00 AM Rating: 5