Accaddemy

தெமட்டகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஜோன் சீனா கைது !


நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பல பாதாள உலக  குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக இலங்கை பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுருந்த  ஜோன்சீனா என்பவரை நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு தற்போது மஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக தலைவர் தெமடகொட சமிந்தவின் சிஷ்யரான ஜோன்சீனாவை பொலிஸ்சார் மிகத் தீவிரமாக தேடிவந்துள்ளனர்.

இந்த நிலையில் தெமடகொட பிரதேசத்தில் தெமடகொட சமிந்தவின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது 
பொலிஸார் சுற்றி வளைத்து அவரை கைது செய்துள்ளனர்.

இல்னக்கையில் பாதாள உலக கோஷ்டி செயற்பாடுகளை இல்லாமல் செய்ய பொலிஸ் விஷேட குழுக்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெமட்டகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஜோன் சீனா கைது ! தெமட்டகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஜோன் சீனா  கைது ! Reviewed by Madawala News on 9/16/2016 02:20:00 PM Rating: 5