tg travels

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தை தனியார் மயப்படுத்த அரசு திட்டம் !

நாட்டில் வரி அரவிடும் பணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அவ்வமைப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் அழைப்பாளர் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க...

தற்போது நாட்டில் வரி அரவிடும் பணியை மெகன்ஸி என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.எதுவித அமைச்சரவை அங்கீகாரம் இன்றி ரவி கருநாயக்கவின் சொந்த விருப்பத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரியை அறவிட முடியாத அரசுக்கு எவ்வாறு நாட்டை முன்னேற்ற முடியும்.

நாட்டின் இறைவரி திணைக்களத்தை விறபனை செய்வதற்கான முன்னோட்டமே இது இதுவே ஐக்கிய தேசிய கட்சியின்  கொள்கை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தை தனியார் மயப்படுத்த அரசு திட்டம் ! உள்நாட்டு இறைவரி திணைக்களத்தை தனியார் மயப்படுத்த அரசு திட்டம் ! Reviewed by Madawala News on 9/07/2016 10:21:00 PM Rating: 5