Ad Space Available here

அமைச்சர் தயா கமகேக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் பிரேரணை - அமைச்சர் நசீர்-பைஷல் இஸ்மாயில் -
மாகாண சபையையும், அதன் அதிகாரத்தையும் கொச்சைப்படுத்திய ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகேக்கு எதிராக எதிர்வரும் 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளரிடம் விஷேட பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் நேற்றிரவு (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தின் கீழுள்ள ஹிங்குரானை  தொழிற்துறை திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட சந்தை விற்பனை நிலையத்தை கடந்த 27 ஆம் திகதி  உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அங்கு செல்வதற்கு முன்னர் அமைச்சர் தயா கமகே மிகவும் மோசமான முறையில் அக்கட்டிடத்தை திரைநீக்கம் செய்து வைத்திருந்தார். இவ்வாறு ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள ஒரு அமைச்சர் நடந்து கொண்டமையானது மிகவும் கவலை தரும் விடயமாகும். 

வடகிழக்கு மாகாணம் தனியாகப் பிரிந்து கிழக்கு மாகாணமாக மாறி இரண்டாவது முறையாகவும் தன்னுடைய கிழக்கு மாகாண ஆட்சியை முன்னெடுத்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது. இதனை அமைச்சர் தயா கமகே தான் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் மாகாண சபையின் அதிகாரத்தையும், மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளையும் நன்றாக அறிந்தவராவார். இப்படியான ஒருவர் மாகாண சபையின் அதிகாரத்தினை கொச்சைப்படுத்தியதை என்னி நான் வேட்கப்படுகின்றேன்.

கடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் சுமார் 20,000 இற்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளதை அவர் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் இருப்பதின் காரணமாகவே அன்று அவர் மிகக் கேவலமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.  

இந்த ஆட்சி மாற்றத்திற்கு முழுமையாக பெரும்பான்மை சமூகம் இருந்த போதிலும், தமிழர்களும், முஸ்லீம்களும் ஒன்றிணைந்து நல்லாட்சியினை உருவாக்கியுள்ளனர். அதன் காரணத்தால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அந்தஸ்த்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. இதனை தாங்கிக்கொள்ள முடியாதவராகவும் இவ்வாறான செயற்பாட்டினை மிகக் கேவலமாகவும், சிறு பிள்ளைத்தனமான காரியங்களை செய்து வருகின்றார். இதற்கு கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாஸ கலபெத்தி அவர்களும் துணை நின்றதும் கவலையளிக்கின்றது. 

அம்பாறையில் தொழில் பேட்டை இல்லாத சூழ்நிலையில் நெல்சிப் திட்டத்தின் மூலம் 40  மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொழில் பேட்டை  முதலமைச்சரினால் திறந்து வைக்கப்படவிருந்தது. ஆனால் இந்த விடயத்தில் அமைச்சர் தயா கமகேயும், அவரின் துணைவியாரும் இணைந்து குடும்ப ஆட்சினை அன்று நடாத்திக் காட்டியிருந்தனர். இவர்களின் இச்செயற்பாடு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளோம். 

இந்த நல்லாட்சியில் மூன்று இன மக்களும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறனவர்களின் செயற்பாடுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தை அடக்கி கட்டியாள வேண்டும் என்கின்ற நிலைமைக்கு வந்தபோது அவைகளை தவிடு பொடியாக்கி ஒரு சிறந்த நல்லாட்சி அரசினை கொண்டு வந்து காட்டியுள்ளோம். என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திவைக்க விரும்புகின்றேன். 

தற்போது இந்த நல்லாட்சி அரசின் மூலம் எமது நாட்டில் மக்கள் நிம்மதியாக தங்களின் வாழ்க்கை நடைமுறைகளை மாறிக்கொண்டு ஒரு நின்பதியான வாழ்க்கை வட்டத்தில் வாழ்ந்து வருவதையிட்டும் எமது ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரி ஆகியோர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

அமைச்சர் தயா கமகேக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் பிரேரணை - அமைச்சர் நசீர் அமைச்சர் தயா கமகேக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் பிரேரணை - அமைச்சர் நசீர் Reviewed by Madawala News on 9/04/2016 10:58:00 AM Rating: 5