குவைத்தில் இருந்து நேய்வாய்ப்பட்டு நாடு திரும்பிய பெண் ஒருவரின் சிறுநீரத்தை காணவில்லை பொலிஸ் முறைப்பாடு ...



குவைட் நாட்டிலிருந்து நோய் வாய்ப்பட்ட நிலையில் வந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் சிறுநீரகம் திருடப்பட்டுள்ளதாக அவரது கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குவைட் நாட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் போது நோய் வாய்ப்பட்டு மூன்று மாதமாக அந்நாட்டில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரின் சிறுநீரகமே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புலத்சிங்கள, மில்லகந்த 50 ஆம் ஏக்கர் பிரதேசத்தில் குடியிருக்கும் அப்பெண்ணின் கணவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

இப்பெண்ணின் சிறுநீரகம் ஒன்று காணாமல் போயிருப்பது, கொழும்பு தேசிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட பின்னர், வைத்தியர் ஒருவர் கூறிய பின்னரே தெரியவந்ததாகவும் கணவர் பொலிஸில் குறிப்பிட்டுள்ளார். (மு)

குவைத்தில் இருந்து நேய்வாய்ப்பட்டு நாடு திரும்பிய பெண் ஒருவரின் சிறுநீரத்தை காணவில்லை பொலிஸ் முறைப்பாடு ... குவைத்தில் இருந்து நேய்வாய்ப்பட்டு நாடு திரும்பிய பெண் ஒருவரின் சிறுநீரத்தை காணவில்லை பொலிஸ் முறைப்பாடு ... Reviewed by Madawala News on 9/09/2016 11:37:00 PM Rating: 5