Oceas

நஸீபுல்லாஹ் வின் நேர்மைக்கு கிடைத்த கௌரவம் !


ஐக்கிய அரபு அமீரத்தில் ஓட்டுனராக பணியாற்றும் Nasibullah  Sher Dawala என்ற பாகிஸ்தான்  நாட்டவர் ஷார்ஜாவில் சிறப்பு கவுரவ சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நேர்மையானவர் என்ற இந்த கௌரவிப்பை ஷார்ஜா வீதி மற்றும் போக்குவரத்து அதிகாரசபை வழங்கியுள்ளது.

அதிகாரசபை பணிப்பாளர் Abdul-Aziz Al Jarwan இதற்கான சான்றிதழை வழங்கி வைத்தார்.

தனது டெக்சியில் பயணம் செய்த கொரிய நாட்டு வர்த்தகர் ஒருவர் விட்டு சென்ற 1.7 மில்லியன் திர்ஹம் பணத்தை மீள் ஒப்படைத்து தனது நேர்மையை வெளிப்படுத்தியமை தொடர்பில் அவருக்கு சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
நஸீபுல்லாஹ் வின் நேர்மைக்கு கிடைத்த கௌரவம் ! நஸீபுல்லாஹ் வின் நேர்மைக்கு கிடைத்த கௌரவம் ! Reviewed by Madawala News on 9/24/2016 09:00:00 PM Rating: 5