Free Space

களுத்துறை முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்துக்கு தீ வைப்பு !

களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான லாஸ்ட் சான்ஸ் (Last Chance) நிறுவனத்தின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள கிளை விற்பனை நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீமூட்டப்பட்டுள்ளது.

இதனால் விற்பனை நிலையத்தில் இருந்த பொருமதிவாய்த்த வர்ண விளக்குகள், உள்ளிட்ட மில்லியன் கணக்கான ரூபா பொருமதியான பொருற்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இது தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரம் நகரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கிளை நிறுவனத்தில் மிக குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட லைடிங் , இலக்றொனிக் மற்றும் செரமிக் பொருட்கள் மழிவான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.



கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் கூட லாஸ்ட் சான்ஸ் நிறுவனத்தின் சில கிளைகளுக்கு எதிராக கடும்போக்காளர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
களுத்துறை முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்துக்கு தீ வைப்பு ! களுத்துறை முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்துக்கு தீ வைப்பு ! Reviewed by Madawala News on 9/20/2016 07:08:00 PM Rating: 5