Accaddemy

வைத்தியர்களின் நடவடிக்கை குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் விசனம் !


கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள வைத்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக கூறி வைத்தியர்கள் சிலர் நேற்று மாலை முதல் கலவியமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர். 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, அதன் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா உள்ளிட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கல்வியமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். 

இந்நிலையில் கல்வியமைச்சினால் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து பார்த்த கடுவலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுள்ள பிரதமர் மற்றும்  கல்வி அமைச்சர் ..

அப்பாவி நோயாளர்களை பிணை வைத்து தங்கள் பிள்ளைகளை பிரபல பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ள வழியுருத்தி வைத்தியர்கள் போராட்டம் நடத்திவது மோசமான செயல்பாடு எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வைத்தியர்களின் நடவடிக்கை குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் விசனம் ! வைத்தியர்களின் நடவடிக்கை குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் விசனம் ! Reviewed by Madawala News on 9/15/2016 01:35:00 PM Rating: 5