Monday, September 26, 2016

முஸ்லிம்களின் பூர்வீகம் தமிழர்களின் வரலாற்றினைவிட பழமைவாய்ந்தது.

Published by Madawala News on Monday, September 26, 2016  | 


வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற கோசத்துக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீக மக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அறைகூவல் விடுக்கின்றார், இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனவும் மறைமுகமாக சொல்லி வைக்கின்றார்.

வடக்கு முதலமைச்சர் வரலாறு பேசுவதற்கு தகுதியானவரா? என்பது எனது கேள்வியாகும், ஏனென்றால் விக்னேஸ்வரனும் அவரைப்போன்று வரலாறுகளை நுனிப்புல் மேய்ந்த ஒருசில தமிழ் தலைமைகளும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள், இஸ்லாமிய மதம் கி பி 8ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறது, ஆகவே வர்த்தக நோக்கில் வந்த அரபியர்கள் தமிழ் பெண்களை திருமணம் முடித்ததன் விளைவாக முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் அதன்விளைவாக தமிழ் பேசுகின்றார்கள் என்றும் எண்ணுகின்றனர், இதுதான் இவர்களது அறியாமையாகும்.
இலங்கையில் சோனகர் சமூகம் என்பது சைவமததுக்கு முந்திய வரலாறுகளை கொண்டுள்ளது என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள். (சோனகர்கள் மலே, மேமன்,போறா என்று பிரிந்திருப்பதனை தடுப்பதற்கு முஸ்லிம்கள் என்ற சொல்பிரயோகதுக்குள் ஒன்று சேர்த்தார்கள் )இந்தியாவின் ஒரிசா பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த திராவிடர்கள் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் வரி செலுத்தும் முறை கொண்டுவரப்பட்ட பின்னரே சைவ மதத்தினராக அடையாளம் காணப்பட்டனர்,
ஆகவே சோனகர் சமூகம் சைவ மதத்துக்கும் முந்திய வரலாற்று பூர்வீகத்தைக்கொண்டுள்ளது.

அதேபோன்று சோனகர்கள் தமிழ் பேசுவதற்கு காரணம் தமிழக பகுதிகளில் வாழ்ந்த சோனகர்கள் சங்கிலிய மன்னனின் கொடுங்கோலின் காரணமாக இலங்கைக்குள் (மரைக்கார்களும்,லெப்பைகளும்) குடிபெயர்கின்றபோது இங்குவாழ்ந்த சோனக உறவுகளோடு உரையாற்றுவதற்கான மொழியாக தமிழை மாற்றிக்கொண்டனர். இவ்விடத்தில் வரலாற்று ஆசிரியர்கள் ஒன்றை குறிப்பிடுகின்றார்கள் வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் பெண்களை வியாபாரத்துக்காக வந்த அரபியர்கள் திருமணம் முடித்தமையால் அவர்களது சந்ததிகள் தமிழ் பேசுகின்றார்கள் என்று திரிவுபடுத்தி கூற முற்படுகின்றனர், அப்படியானால் வடகிழக்குக்கு வெளியில் வாழுகின்ற 3/2 பங்கு முஸ்லிம் சமூகம் எவ்வாறு தமிழ் பேசக் கற்றுக்கொண்டது எனும் சிந்தனை இவர்களுக்கு எழாதது ஏன்? ஆகவே சோனகர்கள் எல்லோரும் தகவல் பரிமாறும் மொழியாக தமிழை தமிழ் இராஜ்ஜியம் இலங்கைக்குள் உருவாவதற்கு முன்னே பேசுகின்றனர் என்பது புலனாகிறது ஆனால் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த சோனகர்கள் அர்வி என்ற மொழியை பாவனையில் கொண்டிருந்ததாகவும் ஒல்லாந்தர் படை எடுப்பின் பின் அர்வி மொழியை அவர்கள் அழித்துவிட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இஸ்லாம் மதம் கி பி 8ம் நூற்றாண்டுக்குப்பின்னர் வந்தாலும் சோனகர் சமூகம் சைவ மதத்தை பின்பற்றும் தமிழர்களுக்கு முந்திய வரலாறுகளை கொண்டது என்பதனை இப்போதுள்ள தலைமைகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் ஏனென்றால்.

இஸ்லாம் மதம் பரவுவதற்கு முன்னால் அரபியர்கள் அரபியர்கள்தான் சீனர்கள் சீனர்கள்தான் ஆனால் அவர்களது மதம் மாறியுள்ளது அந்நிய படைஎடுப்புக்களின்மூலம் மதம் மாற்றமடைந்ததும் நன்னடைதைகள்மூலம் மதம் மாறிய சந்தர்ப்பங்களும் வரலாறுகளில் அதிகம் காணப்படுகிறது

உதாரணமாக முக்குவர் குலத்தை சேர்ந்த சமூகத்தினர் அந்நிய படையெடுப்பில் தமது பெண்களை பாதுகாத்து கொடுத்தமையை இட்டும் சோனகர்களின் நன்னடத்தையின் பொருட்டும் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறிய வரலாறுகள் இன்றும் சான்றாக உள்ளன இம்மக்கள் தற்போது புத்தளப்பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்

குறிப்பாக ஜப்னா மாவட்டத்தில் காணப்படும் நைனா தீவில் பின்பற்றப்பட்டுவந்த நாகவளிபாடு உலகில் நைனா தீவுக்கு அடுத்ததாக இன்னுமொரு நாட்டில்தான் காணப்படுகிறது இந்த வரலாற்றை விக்னேஸ்வரன் தேடி அறிந்தால் சோனகர்கள் யார் என்பதனை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

ஆகவே விக்னேஸ்வரன் வரலாறுகளை தெரிந்து கொள்வதன்மூலம் கிழக்கு வடக்கோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்

SM சபீஸ்


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top