Accaddemy

அலுத்கம வர்த்தக நிலைய தீ ! காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை...


நேற்று அலுத்கம மல்லிகாஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் சமூன் சற்றுமுன் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் குறித்த வர்த்தக நிலையத்தில் எதுவித சர்ச்சைகளோ அல்லது வாடிக்கையாளர்களுடன் முரண்பாடுகளே ஏற்படாமல் வர்த்தக நடவடிக்கைகள் சுமுகமாகவே இடம்பெற்றதாக தீக்கிரையான வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்த அதேவேளை   2014 வன்முறையிலும் குறித்த வர்த்தக நிலையன் தீக்கிரையான பின்னர் ரானுவத்தின் மேற்பார்வையில் தரமாக முழுமையாக வயரிங் செய்யப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டதால் மின் ஒழுக்கு ஏற்பட வாய்ப்பு மிக அரிது எனவும் குறிப்பிட்டார்.

ஆடைக , அலங்காரப்பொருட்கள் என மொத்தமாக பேஸ்மண்ட் உற்பட  நான்கு மாடிகளில் இருந்த 6 கோடி ரூபா பொருமதியான பொருட்களும் கட்டிடத்தின் கண்ணாடி பிட்டிங்ஸ் மற்றும் சோ கேஸ் தளபாடங்கள் என சகல பொருட்களும் தீக்கிரையாகியுள்ளது.

தீ ஏற்பட்ட காரணத்தை கண்டறிய ஸ்தலத்துக்கு  ரசாயன பகுப்பாய்வாளர்கள் இதுவரை (உள்ளூர் நேரம் 3.50 ) அங்கு வருகை தரவில்லை எனவும் அவர்களின் வருகையை தாங்கள் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டார்.

2006, 2014ம் ஆண்டுகளிலும் வன்முறைகளை சந்தித்ததன் பின்னணியில் பிரதேச முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றமை சுட்டிக்காட்டத்தக்க அதேவேளை குறித்த வர்த்தக நிலையத்தை மீளவும் கட்டியெழுப்பும் மனத்திடம் அற்ற நிலையே காணப்படுவதாகவும் பாரிய பொருட் செலவில் மீண்டும் வளர்ச்சி பெற்று வந்த நிலையில் நேற்றைய தீ விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.


அலுத்கம வர்த்தக நிலைய தீ ! காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை... அலுத்கம வர்த்தக நிலைய தீ ! காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை... Reviewed by Madawala News on 9/23/2016 03:20:00 PM Rating: 5