கோத்தபாய ராஜபக்ச உட்பட எட்டு நபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை ...


H B றிஸ்வானுஸ் ஸமான்   01/09/2016   கொழும்பு .
அவண்ட்கார்ட் மெரிடைம்ஸ் நிறுவனதுடன் இணைந்து அரசுக்கு 1,140 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் அவண்ட்கார்ட் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற கேணல் நிஸ்ஸன்க சேனாதிராஜா உட்பட எட்டு நபர்களுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றதில் ஆஜாராகும் படி  கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிடிய அவர்கள் அழைப்பாணை இன்று பிறப்பித்தார்.
2012 ஆகஸ்ட் 7  ஆம் திகதி முதல் 2015 ஜனவரி 8  ஆம் திகதி காலப்பகுதியில் வரை காலப்பகுதியில் இவ் இழப்பீட்டை ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரிப்பதற்கான ஆணைக்குழு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கோத்தபாய ராஜபக்ச , தமயந்தி சுஜாதா ஜயரத்ன , ரத்னா லங்கா நிறுவனத்தின் இராணுவ இணைப்பதிகாரி இயக்குனர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, கருணாரட்ன B.A. கொடகவெல, சோமதிலக திசாநாயக்க, நிஸ்ஸன்க யாப்பா சேனாதிராஜா, ஜயனாத் கொலம்பகெ, மற்றும் ஜயரத்ன பெரெரா ஆகியோருக்கு இவ்வாரு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
அழைப்பாணை விடுத்துள்ள எட்டு நபர்களில் மூவர் ஓய்வு பெற்ற கடற்படை தளபதிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கோத்தபாய ராஜபக்ச உட்பட எட்டு நபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை ... கோத்தபாய ராஜபக்ச உட்பட எட்டு நபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை ... Reviewed by Madawala News on 9/01/2016 03:15:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.