Accaddemy

அயூப் அஸ்மீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வீட்டுத்திருத்தம் மலசல கூட திருத்தங்களுக்கு நிதி உதவி ...

கௌரவ வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் வருடாந்த பிரமான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்டத்தில் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் இம்முறை அதாவது 2016 ஆம் ஆண்டிற்கான நிதி பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் யாழ் மாவட்டத்தில் பல உதவித்திட்டங்களை வழங்குவதற்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அந்த வரிசையில் முதற்கட்டமாக  25 வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தினருக்கு (வீட்டுத்திருத்தம் - 15  மலசல கூட திருத்தம் - 10) 1 குடும்பத்தினருக்கு தலா 20 000 ரூபா வீதம் 25 குடும்பங்களுக்கும் 500 000.00 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு வவுச்சர்கள் கடந்த 2016.08.20 ஆம் திகதி யாழ் சின்னப்  பள்ளிவாயிலின் முன்றலில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை ஆணையாளர் திரு.வாகீசன்  கௌரவ வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.அஸ்மின்.அய்யூப் யாழ் முஸ்லீம் பிரமுகர்களான என்.எம்.அப்துல்லாஹ்,  நிபாஹிர் , நிராஸ், லாபிர் இவர்களுடன் பயனாளிகளும் பங்கு பற்றினார்கள்.

தகவல் என்.எம். அப்துல்லாஹ்

அயூப் அஸ்மீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வீட்டுத்திருத்தம் மலசல கூட திருத்தங்களுக்கு நிதி உதவி ... அயூப் அஸ்மீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வீட்டுத்திருத்தம்  மலசல கூட திருத்தங்களுக்கு நிதி உதவி ... Reviewed by Madawala News on 9/27/2016 04:53:00 PM Rating: 5