tg

அத்திப்பட்டியாகும் பொத்துவில்...


பொத்துவிலிலே அடிப்படையில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அவற்றை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகள் எதுவுமில்லாமல் அவை காலந்தொட்டு கிடப்பில் இருப்பது புதிய செய்தியல்ல.


அடிப்படை பிரச்சினைகளாக,


கல்வி

சுகாதாரம்

காணியும் எல்லையும் 

விவசாயக்காணியும் நீர்ப்பாசனமும்

வியாபார தொழில் துறவுகள்

சமூக சீர்திருத்தம் , என பிரதானமாக வகைப்படுத்தலாம்.


மேற்கூறிய விடயங்களில் மக்கள் எந்தளவிற்கு தெளிவாக உள்ளார்கள் என்பது ஒரு கேள்விக்குறி!


இவற்றை மக்கள் அறிந்து தெளிவு பெற்றால் தங்களது அரசியல் இருப்பின் எதிர்காலம் என்ன என்பதும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கேளவிக்குறி!


ஆக, தங்களின் சுயநலத்திறகாக மக்களை அடிமட்ட முட்டாள்களாக்கி தங்களின் இருப்பை பாதுகாத்துகொள்ளவே  குறுநில மன்னர்கள் முதல் தேசிய அரசியல்வாதிகள் வரை நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பொத்துவிலை பொருத்தவரை உள்ளங்கை நெல்லிக்கனி!


பொத்துவிலில் உள்ள பிரச்சினைகள் தெரியாமலா இவ்வளவு நாளும் இந்த அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள்?


மக்கள் விழித்தெழும் தருணங்களிலெல்லாம் பிள்ளைகளுக்கு குச்சி மிட்டாய் கொடுப்பது போல அறிக்கைகள் விட்டு அவற்றை மழுங்கடிக்கச் செய்வதையே குறுநில மன்னர்கள் தங்கள் விசுவாச தலைவர்களுக்காக செய்து வருகிறார்கள் !


பொத்துவிலை நேசிக்கின்ற அனைத்து உள்ளங்களினதும் ஏக்கங்களில் ஒன்றுதான் தனியான கல்வி வலயம்.

எங்களின் ஏக்கமெல்லாம் கல்விக்கு வசதி செய்து தாருங்கள், மீதத்தை நாங்களே செய்து கொள்கிறோம் என்பதே !

எங்களது முன்னேற்றமெல்லாம் கல்வியெனும் பாலமின்மையால் இலக்கை அடைய முடியாமல் முடக்கப்படுகிறது.


சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் அண்மைக்காலமாக PIS செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாக உள்ளதுடன், மக்களை விழிப்பூட்டுவதும் இலக்கை அடையும் வரை போராட்டங்களை முன்னெடுப்பதும்  Pottuvil Intellectual Society  (PIS) இன் கடமை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். 


அன்பார்ந்த அரசியல்வாதிகளே!

நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை.

பொத்துவிலிலே காணப்படுகின்ற ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டு அறிக்கை விடுங்கள், அது வரையில் உங்கள் அறிக்கை பெட்டியை  மூடிவைக்க மறவாதீர்கள்!


இக்காலவரை வாக்களித்த மக்களுக்காக

ஒரேயொரு பிரச்சனையை தீர்த்துவிட்டு வாருங்கள் எம்முன்னே, உங்களை நாங்கள் மெச்சுகிறோம், நன்றியுடையவர்களாவோம்!


Dr Abdul Razak AC

Oman

அத்திப்பட்டியாகும் பொத்துவில்... அத்திப்பட்டியாகும் பொத்துவில்... Reviewed by Madawala News on 9/24/2016 11:05:00 PM Rating: 5