Free Space

கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ! பிரதேசத்துக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு..


கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த அன்கும்புர பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொருப்பதிகாரி உள்ளிட பொதுமகன்கள் சிலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அன்கும்புர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் குழு ஒன்று கல்ஹின்னை பிரதேசத்துக்கு வந்து முஸ்லீம்களுக்கு தூசன வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.அவ்விடத்துக்கு வந்துள்ள சிலர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு வினயனாக கேட்டுள்ளபோதும் அவர்கள் அவர்களை  திட்டி அவர் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

அதனை தொடந்து  அங்கு  வாக்குவாதம் முற்றி குறித்த பெரும்பான்மை குழுவுக்கும் அங்கிருந்த முஸ்லீம் வாலிபர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து ஸ்தலத்துக்கு விரைந்த அங்கும்புர பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி (போக்குவரத்து பிரிவு )மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் பெரும்பான்மை குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்து சென்றுள்ள மத்திய மாகாண சாபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜி மற்றும் ஹிதாயத் சத்தார் ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஏக்கனாயக்க அவர்களை உடன் தொடர்புகொண்டு கண்டி மாவட்டத்தில் உள்ள கட்டுகஸ்தோட்டை,களைந்தார் ,அலவாத்துகொடை , என  பல பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸாரை ஸ்தலத்துக்கு அனுப்பி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தற்போது கல்ஹின்னை பிரதேசத்துக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ! பிரதேசத்துக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு.. கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ! பிரதேசத்துக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு.. Reviewed by Madawala News on 9/15/2016 08:19:00 AM Rating: 5