பிரதேச விகாரையின் பிரதம தேரர் முன்னின்று தொழுகைக்காக மைதான அனுமதியை பெற்றுக்கொடுத்த நிகழ்வு ...


கண்டி மெனிக்கின்னை பிரதேசத்தில் இன்று ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

மெனிக்கின்னை பொலிஸ் மைதானதத்தில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் மெனிக்கின்னை, திகனை, பலகொல்லை , மடவலை உள்ளிட்ட பல பிரதேங்களில் இருந்தும் பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

பெரும்பான்மை மக்கள் செரிந்துவாழும் மெனிக்கின்னையில் பொலிஸ் மைதானத்தை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ள போது மெனிக்கின்னை விகாரையின் பிரதம தேரர் பிடியகெதர ஹாமதுரு என அழைக்கப்படும் தேரர் தேரரே முன்னின்று மைதானத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளார்.



கடந்த காலங்களில் மெனிக்கின்னை விகாரைக்கு சொந்தமான காணியில் பெருநாள் தொழுகை இடம்பெற்று வந்த நிலையில் தற்போது அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக மெனிக்கின்னை பொலிஸ் மைதானத்தில் பெருநாள் தொழுகை இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தொழுகையின் பின்னர் குறித்த தேரருக்கு ஏற்பாட்டு குழுவினர் நன்றி தெரிவித்தனர்...


பிரதேச விகாரையின் பிரதம தேரர் முன்னின்று தொழுகைக்காக மைதான அனுமதியை பெற்றுக்கொடுத்த நிகழ்வு ... பிரதேச விகாரையின் பிரதம தேரர்  முன்னின்று தொழுகைக்காக மைதான அனுமதியை பெற்றுக்கொடுத்த நிகழ்வு ... Reviewed by Madawala News on 9/12/2016 07:57:00 AM Rating: 5