Free Space

முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று (03) கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியில், போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுகையிர் கலந்து கொண்டார்.

தகவல் அறியும் சட்டமூலத்தை சிறுபான்மையினர் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற தலைப்பில் தேசிய ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் நவாஸ் முஹமட் உரையாற்றினார்.

மீடியா போரத்தின் மீடியா டயறி, மற்றும் வருடாந்த சஞ்சிகையும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.

800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 30 பேர் போட்டியிட்டனர்.

அதில் 15 பேர் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் விபரம்:
01. எம்.பி.எம் பைருஸ் – 72 வாக்குகள்
02. ரசீத் எம் ஹபீல் – 61 வாக்குகள்
03. ஏ. எஸ் ஜெசீம் – 61 வாக்குகள்
04. எம் றிபாஸ் – 60 வாக்குகள்
05. மௌலவி முஸ்தபா – 56 வாக்குகள்
06. புர்கான் பீ. இப்திகார்– 51வாக்குகள்
07. ஜெம்சித் – 41வாக்குகள்
08. மும்தாஸ் சருக் – 49 வாக்குகள்
09. எம். ஏ. நிலாம் 48 வாக்குகள்
10. பெரவுஸ் 46 வாக்குகள்
11. அஸ்கர்கான் 45 வாக்குகள்
12. நுஸ்கி முஸ்தார் 45 வாக்குகள்
13. சாகிதா 45 வாக்குகள்
14. ஜாக44 வாக்குகள்
15. பாயிஸ் 43வாக்குகள்

இதேவேளை, முஸ்லிம் மீடியா போரத்தின் 2016/2018 ஆண்டுக்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களும், பொதுச் செயலாளராக ஸாதிக் ஷிஹான் அவர்களும், பொருளாளராக எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் அவர்களும் வாக்கெடுப்பின்றி  ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

– அஷ்ரப் ஏ சமத் –

முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு... முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு... Reviewed by Madawala News on 9/03/2016 07:56:00 PM Rating: 5