Oceas

சுதந்திர கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் முஸ்லீம் முற்போக்கு முன்னணியாக ...


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான அரசியல் சக்திக்கு ஆதரவு வழங்கும் முஸ்லீம் அரசியல் முன்னனி தொடர்பான விபரங்கள் நாளை பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் காரியாலத்தில் நடக்கும் ஊடக மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முஸ்லீம் அரசியல் பிரிவில் இலங்கை பூராவும் உள்ள சுதந்திர கட்சி மஹிந்த ஆதரவு முஸ்லீம் அரசியல் பிரமுகர்கள் பலரும் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அதற்கான தேசிய அமைப்பாளராக குருநாகல் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவுடன் முன்னோக்கி செல்லும் பயணத்தில் முஸ்லிம் குரல் எனும் தொனிப்பொருளில் இந்த முஸ்லீம் அரசியல் பிரிவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு இடம்பெறும் ஊடக மாநாட்டில் இது தொடர்பாக உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் கூட்டமைப்பில் முஸ்லீம் முற்போக்கு முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவருக்கு ஆதாரவு வழங்கப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் முஸ்லீம் முற்போக்கு முன்னணியாக ... சுதந்திர கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் முஸ்லீம் முற்போக்கு முன்னணியாக ... Reviewed by Madawala News on 9/21/2016 10:16:00 AM Rating: 5