Yahya

காத்திருக்கும் இருமுனை சவால்கள் ...

அர­சியல் களம் தொடர்ந்து சூடி­பி­டித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றது. அர­சி­யலில் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை எதிர்­வு­கூ­று­வது கடி­ன­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.


கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திக­தி­யி­லி­ருந்தே நாட்டின் அர­சியல் கள­மா­னது பர­ப­ரப்­பா­கவே காணப்­ப­டு­கின்­றது. 


அதா­வது அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் அடுத்த வருடம் நடுப்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஜனா­தி­ப­தி­யினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள கிழக்கு, வட மத்­திய சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரிய வளர்ச்சி மற்றும் மஹிந்த அணி­யி­னரின் புதிய அர­சியல் கட்சி ஆரம்­பிக்கும் நட­வ­டிக்­கைகள் என்­ப­னவே தற்­போது அர­சியல் களத்தில் சூடு­பி­டிக்கும் கார­ணி­க­ளாக மாறி­யுள்­ளன. 


விசே­ட­மாக மஹிந்த அணி­யினர் புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிப்­பார்­களா? இல்லை கட்­சியை ஆரம்­பிப்­பது போன்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­திக்­கொண்டே இருப்­பார்­களா? என்றும் மக்கள் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றனர். அதா­வது புதிய கட்­சியை ஆரம்­பிக்கும் செயற்­பாட்டில் என்­னதான் அறிக்­கையை விட்­டாலும் மஹிந்த ராஜ­பக் ஷ அவ­ச­ரப்­ப­ட­மாட்டார் என்­பதே பொது­வான கருத்­தாகும். மறு­புறம் புதிய கட்­சியை ஆரம்­பிக்கும் செயற்­பாட்டில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஒரு­போதும் ஈடு­ப­ட­மாட்டார் என்றும் ஒரு சாரார் தெரி­விக்­கின்­றனர்.


இந்த விட­யத்தில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியே பாரி­ய­ளவில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் நாட்டின் அர­சியல் கள­நி­லை­வ­ரங்கள் எந்­த­வ­கையில் பார்த்­தாலும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு பாத­க­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அடுத்­த­கட்­ட­மாக உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலும் மாகாண சபைத் தேர்­தல்­களும் நடத்­தப்­பட்டால் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு என்ன நடக்கும் என்­பதும் அக்­கட்சி எவ்­வா­றான சவால்­களை எதிர்­கொள்ளும் என்­பதே தற்­போ­தைய பிர­தான 

விட­ய­மாகும். 


அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதிர்­வரும் தேர்­தல்கள் மற்றும் தேர்தல் கால­மா­னது அந்­த­ளவு இனி­மை­யா­ன­தாக அமை­யப்­போ­வ­தில்லை என்­பதே யதார்த்­த­மாகும். அந்த சவால்­களை எதிர்­கொண்டு செயற்­ப­டு­வதன் மூலமே சுதந்­திரக் கட்­சியின் புதிய தலை­மைத்­து­வத்தின் வெற்றி தங்­கி­யுள்­ளது. 


தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய தேசிய கட்சி எதிர்­வரும் தேர்தல் ஒன்றில் வெற்­றி­கொள்ளும் அளவில் பல­ம­டைந்­துள்­ளது என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. கட்­சியின் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதன் முன்­னேற்­றத்தில் பாரிய பக்­க­ப­ல­மாக இருக்­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க கட்­சியை கடும் அர்ப்­ப­ணிப்பின் ஊடாக முன்­னேற்றிச் செல்­கின்றார்.


இந்­நி­லையில் மிகவும் பல­மான முறையில் பய­ணிக்­கின்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்­னி­லையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி வலு­வி­ழந்தே காணப்­ப­டு­கின்­றது என்­ப­தனை மறுக்க முடி­யாது. அதன்­படி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியில் பாரிய பிளவு ஏற்­பட்­டுள்ள நிலையில் அடுத்­து­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களில் சுதந்­திரக் கட்சி எவ்­வாறு பல­மான முறையில் போட்­டி­யி­டப்­போ­கின்­றது என்ற கேள்­விக்­கான விடை கடி­ன­மா­ன­தாகும். 


அதா­வது எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தொடர்ந்து தாம­த­மாகிச் செல்­வ­தற்கும் அர­சியல் ரீதியில் கார­ணங்கள் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. அதா­வது சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டுள்ள நிலையில் தற்­போது தேர்தல் நடத்­தினால் அது கட்­சிக்கு பாத­க­மாக அமையும் என்­பதால் உள்­ளூ­ராட்­சி ­மன்ற தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக பொது எதி­ரணி குற்றம் சாட்­டி­வ­ரு­கின்­றது. ஆனால் அந்தக் குற்­றச்­சாட்டை சுதந்­திரக் கட்சி மறுத்­து­வ­ரு­கின்­றது. அர­சாங்க தரப்பில் உள்­ளூ­ராட்­சி­ மன்ற தேர்தல் தாம­தத்­துக்கு எல்லை நிர்­ணய விவ­காரம் பிர­தான கார­ணி­யாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. 


இவ்­வா­றான கார­ணிகள் எப்­படி கூறப்­பட்­டாலும் யதார்த்தம் என்­ன­வெனில் பிளவு ஏற்­பட்­டுள்ள நிலையில் சுதந்­திரக் கட்சி உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை சந்­திக்­கு­மானால் பாரிய வீழ்ச்சி ஏற்­ப­டலாம். அடுத்­த­கட்ட அர­சியல் காய்­ந­கர்த்­தலும் உள்­ளூ­ராட்­சி­மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களும் சதந்­திரக் கட்­சிக்கு பாரிய சவா­லா­கவே காணப்­படும்.


இந்­நி­லையில் புதிய கட்சி ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் கூட்டு எதி­ர­ணி­யினர் அவ்­வப்­போது தக­வல்­களை வெளி­யிட்­டு­வந்­த­போ­திலும் உறு­தி­யான அறி­விப்பு இது­வரை இல்லை. அந்­த­வ­கையில் கடந்த புதன்­கி­ழமை தேர்­தல்கள் ஆணைக்குழு தலைவரை சந்­திப்­ப­தற்கு தேர்­தல்கள் செய­ல­கத்­துக்கு வருகை தந்­தி­ருந்த கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­த­ரான பஷில் ராஜ­பக் ஷ புதிய அர­சியல் கட்சி தொடர்பில் கீழ்க்­கண்­ட­வாறு கருத்து வெ ளியிட்­டுள்ளார். 


அதா­வது "" கூட்டு எதிர்க் கட்­சியின் புதிய அர­சியல் கட்சி மிக விரைவில் அறி­விக்­கப்­படும். ஆனால் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் அறி­விப்பு வராமல் கட்சி குறித்து அறி­விப்­பதில் பலன் இல்லை. கட்­சியின் தலைவர் யார் ? சின்னம் என்ன? என்­பது பிரச்­சினை இல்லை. ஆனால் புதிய மாற்று அர­சியல் சக்­தியின் தேவை தற்­போது அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. இதனை ஈடு செய்­வ­தற்­கான அடிப்­படை கார­ணிகள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. தேர்­தலை அறி­விக்கும் பட்­சத்தில் அனைத்தும் வெளியில் விடப்­படும். மக்கள் ஆணையை மதிப்­பிட தேர்­தலை நடத்த வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும். அர­சாங்கம் தேர்­தலை காலம் கடத்­து­கின்­றது. எந்­வொரு ஆட்சி காலத்­திலும் இன்று போல் தேர்­தலை நடத்­தாது காலம் கடத்­தப்­ப­ட­வில்லை. புதிய கட்சி வரும் . அதற்கு முன்னர் தேர்­தலை பெற்றுக் கொள்ள வேண்டும்"" இவ்­வாறு கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பஷில் ராஜபக் ஷ குறிப்­பிட்­டுள்ளார்.


அவ்­வாறு பார்க்­கும்­போது உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் அறி­விக்­கப்­பட்ட உட­னேயே கூட்டு எதி­ரணி புதிய கட்சி குறித்த அறி­விப்பை வெளியி­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிரிந்து உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை சந்­திக்­கப்­போ­வது உறு­தி­யா­கின்­றது. அது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சிக்கு பாரிய சவா­லா­கவே அமையும். 

அது மட்­டு­மன்றி விரைவில் புதிய கட்சி குறித்த அறி­விப்பு வெளி­யாகும் என்­ப­தற்­கான சமிக்­ஞையை வெ ளிக்­காட்டும் வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பவித்ரா வன்­னி­யா­ரச்­சியும் கருத்து வெளியிட்­டி­ருந்தார். 


அதா­வது ""தனிக்­கட்­சி­யாக உரு­வெ­டுத்து கூட்­டணி அமைப்போம். இதன் ஆரம்ப கட்­ட­மாக ' போராட்­டத்­திற்கு வலுச்சேர்க்கும் புதிய மக்கள் சக்தி " முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­படும் அனைத்து மட்­டத்­தி­லான ஒருங்­கி­ணைப்­பு­களும் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் தகுந்த தரு­ணத்தில் தேசிய தலைவர் கட்சி சின்­னத்­துடன் மக்கள் மத்­தியில் வருவார்"" என்று பவித்ரா வன்­னி­யா­ராச்சி கூறி­யுள்ளார். 


இதன்­மூலம் புதிய கட்சி ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­ற­மைக்­கான அறி­கு­றிகள் அதி­க­ளவில் தென்­ப­டு­கின்­றன. புதிய கட்­சியை ஆரம்­பிப்­ப­தற்கு என்­னதான் கூட்டு எதி­ரணி முயற்­சித்­தாலும் விரும்­பி­னாலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்த விட­யத்தில் அவ­ச­ரப்­ப­ட­வில்லை என்­பதே தெளி­வா­கின்­றது.


இது இவ்­வாறு இருக்க சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிள­வு­பட்­டாலோ அல்­லது மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் புதிய கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டாலோ அதனால் ஐக்­கிய தேசிய கட்சி மகிழ்ச்­சி­ய­டையும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிள­வு­ப­டு­மானால் அதனால் நிச்­ச­ய­மாக ஐக்­கிய தேசிய கட்­சிக்கு பாரிய நன்மை கிடைக்கும். 


ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வரை அக்­கட்சி மஹிந்த புதிய கட்சி ஆரம்­பிக்கும் விவ­கா­ரத்தை விமர்­சித்த வண்­ணமே உள்­ளது. உதா­ர­ண­மாக புதிய கட்சி விவ­காரம் குறித்து கருத்து வெ ளியிட்­டி­ருந்த அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் எதிர்­வரும் 8 ஆம் திகதி மல­ர­வி­ருக்கும் தாமரை பூ சின்­னத்­தி­லான புதிய கட்சி பூத்­த­வு­டனே உதிர்ந்து விடும். தற்­போது அந்த கட்­சியின் பலம் நன்­றாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. புதிய கட்சி ஆரம்பித்­தாலும் அவர்­க­ளினால் நிமிர்ந்து நிற்க முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்ளார். 


ஐக்­கிய தேசிய கட்­சியின் பிர­தி­நி­தி­க­ளினால் எவ்­வாறு இந்த விடயம் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தப்­பட்­டாலும் சுதந்­திரக் கட்சி பிள­வு­ப­டு­வதால் அக்­கட்­சிக்கு நெருக்­கடி குறையும் என்­பதே யதார்த்­த­மாகும்.


இதே­வேளை, சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து மஹிந்த அணி­யினர் புதிய கட்சி யை ஆரம்­பித்து அத­னூ­டாக எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு முகம்­கொ­டுத்தால் அது சுதந்­திரக் கட்­சிக்கு பாரிய வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும். 

அதே­நேரம் புதிய கட்­சியை ஆரம்­பித்து அர­சியல் களத்தில் கால் பதிப்­பது என்­பதும் பாரிய சவா­லான விட­ய­மாகும். இலங்­கையின் வர­லாற்றில் பிர­தான கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்று புதிய கட்­சியை ஆரம்­பித்­து­வெற்­றி­பெற்ற பதி­வுகள் மிகவும் குறை­வாகும். 1956 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்ற பண்­டா­ர­நா­யக்க சுதந்­திரக் கட்­சியை ஆரம்­பித்து வெற்­றி­யீட்­டினார். 


ஆனால், அப்­போது வேறு அர­சியல் கட்­சிகள் இருக்­க­வில்லை. அதன் பின்னர் பிர­தான கட்­சி­க­ளி­லி­ருந்து பிரிந்து சென்று தனிக்­கட்­சியை ஆரம்­பித்­த­வர்கள் வெற்­றி­பெ­ற­வில்லை. எனவே தற்­போ­தைய நிலையில் புதிய கட்­சியை ஆரம்­பித்தால் அந்த முயற்சி நிறை­வேறும் என்­பது மிகவும் கடி­ன­மாகும். 

இந்த இடத்தில் தற்­போது அர­சியல் களத்தில் இரு­முனை சவால்கள் தலை­தூக்­கி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அதா­வது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ புதிய கட்­சியை ஆரம்­பித்தால் அது சுதந்­திரக் கட்சிக்கு சவாலானதாகவே அமையும். அதேவேளை புதிய கட்சியை ஆரம்பித்து பயணத்தை மேற்கொள்வதும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் சவாலான விடயம்தான். அவ்வாறு பார்க்கும்போது இரண்டு தரப்பினருக்கும் சவாலான விடயங்களே தற்போதைய நிவைலமையில் அரசியல் களத்தில் காணப்படுகின்றன.


இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டுதான் மைத்திரி தரப்பினர் மஹிந்த அணியை தம்முடன் வந்து இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். குருணாகலில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி பகிரங்கமாகவே இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். புதிய கட்சி ஆரம்பிப்பதை கைவிட்டு எம்முடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ அந்த அழைப்பை நிராகரித்திருந்தார். 

அந்தவகையில் பார்க்கும்போது எதிர்வரும் மாதங்களில் நாட்டின் அரசியல் களத்தில் சூடுபிடிக்கும் பல்வேறு நகர்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்க முடிகின்றது. புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமா அல்லது ஒன்றிணைந்தே பயணிப்பார்களா? போன்ற கேள்விகளுக்கு எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு பதில் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


(ரொபர்ட் எண்டனி - கேசரி )

காத்திருக்கும் இருமுனை சவால்கள் ... காத்திருக்கும் இருமுனை சவால்கள் ... Reviewed by Madawala News on 9/24/2016 10:39:00 AM Rating: 5